திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியவர் கைது - 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.
தூத்துக்குடி 2022 ஜூலை 30 ;திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியவர் கைது - 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்செந்தூர் புளியடி பகுதியை சேர்ந்த சுப்பாராஜ் மகன் சுப்புராஜ் (58) என்பவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த தனது இருசக்கர வாகனம் கடந்த 08.07.22 அன்று காணாமல் போயுள்ளது.
அதே போன்று திருச்செந்தூர் சன்னதி தெருவை சேர்ந்த சந்திரராம் மகன் ராஜேஷ் (24) என்பவர் சன்னதி தெருவில் உள்ள ஒரு கடையில் முன்பு நிறுத்தி வைத்திருந்த தனது இருசக்கர வாகனம் கடந்த 01.07.2022 அன்று காணாமல் போயுள்ளது.
இதுகுறித்து மேற்படி காணாமல்போன இருசக்கர வாகனங்களில் உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) கனகபாய் தலைமையில் திருச்செந்தூர் உட்கோட்ட தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டதில், காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த ஹசன் முகமது மகன் ஷேக் முகமது (38) என்பவர் மேற்படி சுப்புராஜ் மற்றும் ராஜேஷ் ஆகியோரின் இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது.
உடனடியாக மேற்படி தனிப்படை போலீசார் எதிரி ஷேக் முகமதுவை கைது செய்து அவரிடமிருந்த திருடப்பட்ட TN 37 BE 4646 (TVS XL Super) மற்றும் TN 74 AM 7473 (TVS XL Super) என்னும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.