உடன்குடியில் ஒவ்வோரு வீட்டிலும் நல்ல தண்ணீர் வர வேண்டுமானால் உடன்குடி பகுதியின் உவர்ப்பு நீர் மாற வேண்டுமானால் மெஞ்ஞானபுரம் சடைய நேரி குளம் பத்தாங்கரை பகுதி கால்வாய்க்கு தண்ணீர் வர வேண்டும்
தூத்துக்குடி 2019 டிசம்பர் 2 ; உடன்குடியில் ஒவ்வோரு வீட்டிலும் நல்ல தண்ணீர் வர வேண்டுமானால் உடன்குடி பகுதியின் உவர்ப்பு நீர் மாற வேண்டுமானால் மெஞ்ஞானபுரம் சடைய நேரி குளம் பத்தாங்கரை பகுதி கால்வாய்க்கு தண்ணீர் வர வேண்டும் என்று பொதுமக்கள் கூறியுள்ளார்.
இதுகுறித்து உடன்குடி வே.குணசீலன் ,கூறியதாவது....மெஞ்ஞானபுரம் சடைய நேரி குளத்துக்கு கிழக்கு Uகுதியில் பத்தாங்கரை பகுதிக்கு தண்ணீர் வரும் 2 மதகுகள் உள்ளன. சடைய நேரி குளம் நிரம்பினால் இந்த கால்வாய்களின் வழியாக தண்ணீர் வர மதகுகள் உள்ளன. இந்த மடைகளில் உள்ள ஷட்டர்கள் முறையாக பராமரிக்க படாததால் இயக்க முடியாத அளவில் உள்ளது. இன்று காலை முதல் அதனை சரி செய்ய உடன்குடி ,மெஞ்ஞானபுரம் விவசாயிகள் முயற்சித்தும் முடிய வில்லை.
மேலும் கிழக்குப்பகுதியில் உள்ள இரண்டு மடையில் ஒரு மடையில் மட்டுமே தண்ணீர் விடப்படுகிறது. மற்றொரு மடையில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதன் மூலம் இரு கால்வாய்கள் வழியாக பத்தாங்கரை,மானாச்சி, மானாடு,தண்டுபத்து வழியாக நரிக்குளத்திற்கு கால்வாய் மூலம் தண்ணீர் வரும். பரமன்குறிச்சி அரத்தோட்ட தென் பகுதியில் உள்ள இடக்குடி குளம், சிறுகுளம் ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் கால்வாய்மூலம் வரும்.இந்த இரு மடைகளும் அகலம் மிக குறைவாகவும் முறையாக பராமரிக்க படாமல் ஓலைகள் குப்பை போல கால்வாய்க்குள் முழ்கியும் உள்ளன.இந்த இரு கால்வாய்களும் முறையாக பராமரிக்காமல் போனதால், உடன்குடி பரமன்குறிச்சி, மானாடு, தண்டுபத்து, வெள்ளாளன் விளை அத்தியடி தட்டு , வாத்தியார் குடியிருப்பு , குலையன் குண்டு , செட்டி விளை , செட்டியாUத்து மற்றும் இதனை சுற்றியுள்ள 60 கிராமங்களில் குடி நீர் உவர்ப்பு நீராக மாறிவிட்டது. கால்வாய்களில் தண்ணீர் வந்திருந்தால், கடல் நீர் உப்பு பின் வாங்கிவிடும். நிலத்தடி நீர் மேம்படும். விவசாயம் செய்ய முடியாமல் கிராமங்களை காலி செய்த விவசாயிகள் சொந்த ஊருக்கு வருவார்கள், விவசாயம் செழிக்கும்.
வரலாறு காணாத மழை பெய்தும் உடன்குடி பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் மாறவில்லை அதனை சரி செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு 60 கிராம மக்களின் நன்மை கருதி பத்தாங்கரை மடை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுருங்கி முறையாக பராமரிக்காமல் உள்ள வாய்கால்களை அகலமாக தோண்டி, கால்வாயை விரிவாக்கம் செய்து நீர் ஆதாரம் பெருக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே என் போன்ற இயற்கை ஆர்வலர்களின் வேண்டுகோள் .