Onetamil News Logo

சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் விருப்பமனு ;இளைஞரணி துணை செயலாளர் வக்கீல் ஜோயல் பங்கேற்பு   

Onetamil News
 

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் விருப்பமனு ;இளைஞரணி துணை செயலாளர் வக்கீல் ஜோயல் பங்கேற்பு   


சென்னை 2021 பிப்ரவரி 25 ;சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் விருப்பம் மட்டும் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனு அளித்தார்.
 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக வேட்பாளர்கள் விருப்பமானது விநியோகம் கடந்த 17ஆம் தேதி 
                      தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 9வது நாளாக விருப்பமனு வினியோகம் நேற்று நடைபெற்றது. சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பெயரில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பெயரிலும் பலரும் விருப்ப மனு அளித்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட நேற்று விருப்பமனு வழங்கினார். அப்போது இளைஞரணி துணை செயலாளர் வக்கீல் ஜோயல் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

சைதாப்பேட்டை தொகுதி திமுக தலைவர் மு க ஸ்டாலின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பெயரிலும் தனது பெயரிலும் மா சுப்பிரமணியன் எம்எல்ஏ விருப்பம் மனு அளித்தார் இதுவரையில் திமுகவில் 2500க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல் செய்திருப்பது வேட்பாளர்கள் நேர்காணலின் போது அவர் தேர்வு செய்யப்பட்டு வேட்பாளராக களமிறக்க போடுவார் என்பது உறுதியாகி உள்ளது. 
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி கருணாநிதி போட்டியிட்ட தொகுதிகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தேர்வு செய்தது ஏன் என்று உதயநிதி ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்டதற்கு நான் இந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று திமுக பகுதி செயலாளர்கள் மாவட்ட செயலாளர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர் என்று கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo