Onetamil News Logo

தூத்துக்குடியில் ‘கண்ணை நம்பாதே’ திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தினர் ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் உற்சாகத்துடன் வரவேற்று மகிழ்ந்தனர்.

Onetamil News
 

தூத்துக்குடியில் ‘கண்ணை நம்பாதே’ திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தினர் ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் உற்சாகத்துடன் வரவேற்று மகிழ்ந்தனர்.


திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான மாண்புமிகு., உதயநிதி ஸ்டாலின் அவர்களது நடிப்பில் ‘கண்ணை நம்பாதே’ என்ற திரைப்படம் இன்று வெளியானது.
இதன்படி, தூத்துக்குடி பாலகிருஷ்ணா தியேட்டரில் இன்று வெளியான ‘கண்ணை நம்பாதே’ திரைப்படத்தின் முதல் காட்சியை மாநில திமுக இளைஞர் அணி துணைச்செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் அவர்களது வழிகாட்டுதல்படி தூத்துக்குடி மாவட்ட உதயநிதிஸ்டாலின் நற்பணி மன்றத்தினர் பட்டாசு வெடித்து உற்சாகத்துடன் வரவேற்றனர்.
திரைப்படம் காண வந்த ரசிகர்களை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பால்துரை தலைமையில் நற்பணி மன்றத்தினர் கேக் வெட்டியும், ரசிகர்களுக்கு இனிப்பு கொடுத்தும் உற்சாகத்துடன் வரவேற்று மகிழ்ந்தனர்.
இதில், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற  மாவட்ட செயலாளர் பொருளாளர் சேக்முகமது, துணை தலைவர் நடராஜன், துணை செயலாளர்கள் தொழிலதிபர் காளி, புதுக்கோட்டை சிவமுருகன், மாநகர தலைவர் இளம் தொழிலதிபர் ஏபிஆர்.ஜோ, மாநகர துணை தலைவர் அருண், மாநகர துணை செயலாளர் டினோ, மாநகர பொருளாளர் முகமது, துணை பொருளாளர் சுப்பிரமணியன் மற்றும் தினேஷ்குமார், அபியூத், திமுக இளைஞரணி தொழிலதிபர் வசந்த்,  தளபதி முருகன், சிகிலன், சிலுவைப்பட்டி பாரி, பிரவின்,ஆனந்த பார்த்திபன், பாரதி, தர்ஸ், சுபாஷ், கரண், அருண், சிவா, பிரவின், அஜன், அருள், காளி, உமாபதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo