Onetamil News Logo

புதிய கால்நடை கிளை நிலையங்களை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பன்னீர்குளம், ராஜாபுதுக்குடி, இலுப்பையூரணி ,சின்னவ நாயக்கன் பட்டி ஆகிய இடங்களில் திறந்து வைத்தார் 

Onetamil News
 

புதிய கால்நடை கிளை நிலையங்களை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பன்னீர்குளம், ராஜாபுதுக்குடி, இலுப்பையூரணி ,சின்னவ நாயக்கன் பட்டி ஆகிய இடங்களில் திறந்து வைத்தார் 


கோவில்பட்டி 2020 அக்டோபர் 22 ;தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளாங்கோட்டை பன்னீர்குளம், ராஜாபுதுக்குடி, இலுப்பையூரணி மற்றும் விளாத்திகுளம் வட்டம் சின்னவநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் புதிய கால்நடை கிளை நிலையங்களை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  முன்னிலையில்  கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்கள். 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளாங்கோட்டை, பன்னீர்குளம், ராஜாபுதுக்குடி, இலுப்பையூரணி மற்றும் விளாத்திகுளம் வட்டம் சின்னவநாயக்கன்பட்டி ஆகிய கிராம பகுதிகளில் புதிய கால்நடை கிளை நிலையங்கள் திறப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி,  தலைமையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  முன்னிலையில்,  கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அவர்கள் கயத்தாறு ஒன்றியம் பன்னீர்குளம், வெள்ளாங்கோட்டை, ராஜாபுதுக்குடி, கோவில்பட்டி ஒன்றியம் 
இலுப்பையூரணி மற்றும் விளாத்திகுளம் வட்டம் சின்னவநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் புதிய கால்நடை கிளை நிலையங்களை திறந்து வைத்தார்கள். மேலும் கால்நடை வளர்ப்போருக்கு கால்நடைகளுக்கான மினரல்ஸ் விட்டமின்ஸ் பாக்கெட்டுகளை வழங்கினார். சின்னவநாயக்கன்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னிலை வகித்தார்.
இவ்விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியம் பன்னீர்குளம், வெள்ளாங்கோட்டை, ராஜாபுதுக்குடி கோவில்பட்டி ஒன்றியம் இலுப்பையூரணி விளாத்திகுளம் வட்டம் சின்னவநாயக்கன்பட்டி ஆகிய பகுதி விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர்கள் கால்நடைகளுக்கு தேவையான மருத்துவ உதவி மற்றும் கருத்தரித்தல் உள்ளிட்டவைகளுக்கு கால்நடை மருத்துவர்களிடம் காண்பிக்க வேண்டுமெனில் 2, 3 கிலோமீட்டர் தூரத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. தற்போது இங்கு புதிய கால்நடை கிளை நிலையங்களை  கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரே நேரில் வந்து திறந்து வைத்துள்ளார்கள். மேலும் விளாத்திகுளம் வட்டம் சின்னமநாயக்கன்பட்டியிலும் கால்நடை கிளை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளுக்கு தேவையான பல்வேறு திட்டங்களையும்  முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்படும். முதலமைச்சர் அவர்கள் தூத்துக்குடி மாவடடத்திற்கு வருகிற 29ம் தேதி வியாழக்கிழமை அன்று வருகை தர உள்ளார்கள்.  அன்றைய தினம் நமது மாவட்டத்தில் பல்வேறு முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைக்கவும், பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்கள்.  மேலும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும் பல்வேறு தலைமுறையினர் பயன்பெறும் வகையிலும் சிறப்பான திட்டங்களை அறிவிக்க உள்ளார்கள்.  அரசின் திட்டங்கள் அனைத்தையும் நீங்கள் பெற்று வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திகொள்ள வேண்டும். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசுக்கு என்றும் ஆதரவாக இருக்க வேண்டும் என பேசினார்.
பின்னர்  கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அவர்கள் பேசியதாவது:  
தமிழகத்தில் இந்த ஆண்டு 40 புதிய கால்நடை கிளை நிலையங்கள் ரூ.1.60 கோடி செலவில் திறக்கப்பட உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி பகுதியில் இலுப்பையூரணி, கயத்தாறு ஒன்றியம் பன்னீர்குளம்,  வெள்ளாங்கோட்டை, ராஜாபுதுக்குடி, விளாத்திகுளம் வட்டம் சின்னமநாயக்கன்பட்டி ஆகிய 4 கிராமங்களிலும் புதிய கால்நடை கிளை நிலையங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.  இந்த கால்நடை கிளை நிலையங்களில் கால்நடை ஆய்வாளர் நியமிக்கப்பட்டு கால்நடைகளுக்கு மருத்துவம்  மற்றும் கருத்தரித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.  மேலும் கருத்தரித்தலுக்கு தேவையான திரவ நைட்ரஜன் குடுவை வைக்கப்படும்.  புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஏழை, எளிய பெண்களின் வாழ்க்கைத்தரத்தை  உயர்த்திட கொண்டு வரப்பட்ட திட்டங்களான கறவைப்பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாவட்த்தில் இதுவரை 110 கிராமங்களில் 4555 பயனாளிகளுக்கு தலா ஒரு கறவை பசு வழங்கப்பட்டுள்ளது, இந்த ஆண்டு 8 கிராமங்களில் தலா 50 பயனாளிகள் வீதம் 400 கறவை பசுக்கள் வழங்கப்பட உள்ளது.  இலவச வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தில் இதுவரை 632 ஊராட்சிகளில் 29,984 பயனாளிகளுககுக தலா 4 ஆடுகள் வீதும் 1,19,936 வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு 65 கிராம ஊராட்சிகளில்  3,599 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் நாட்டுப்புற அசில் இன கோழிகள் வழங்கும் திட்டமும் அனைத்து கிராமப்புற பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஏழை, எளிய மக்களின் தேவை அறிந்து அவைகளை நிறைவேற்றும் அரசாக  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு செயல்பட்டு வருகிறது, தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய 5 கால்நடை கிளை நிலையங்களும் அடுத்த ஓர் ஆண்டில் கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்படுவதோடு இந்த மருந்தகங்களுக்கு தலா ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்களும் கட்டி தரப்படும். சின்னவநாயக்க்னபட்டி பகுதியில் உள்ள தகுதியான அனைத்து குடும்பங்களுக்கும் நாட்டுப்புற அசில் இன கோழிகள் வழங்கும்திட்டத்தின் கீழ் கோழி குஞ்சுகள் விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஒரு மாத காலத்தில் வழங்கப்படும் என பேசினார். 
 செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வெள்ளாளங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருமங்கலக்குறிச்சி ஊராட்சி ஓலைக்குளம் கிராமத்தை சேர்ந்த வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பால்ராஜ் அவர்களின் மகன் கருப்பசாமிக்கு பசுமை வீடுகள் திட்டத்தின்கீழ் வீடு கட்டுவதற்கான உத்தரவினை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் மா.சம்பத், துணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், உதவி இயக்குநர்கள் சங்கரநாராயணன், செல்வகுமார், வட்டாட்சியர்கள் பாஸ்கரன் (கயத்தாறு), மணிகண்டன் (கோவில்பட்டி), ரகுபதி (விளாத்திக்குளம்), ஒன்றியக்குழு தலைவர்கள் கஸ்தூரி சுப்புராஜ் (கோவில்பட்டி), முனியசக்திராமசந்திரன் (விளாத்திகுளம்), சுசீலா தனஞ்ஜெயன்(புதூர்), போன்றோர்  கலந்துகொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo