Onetamil News Logo

உதவும் இதயங்கள் ; பேரவையின் 33 ஆம் ஆண்டு தமிழ்விழா 

Onetamil News
 

உதவும் இதயங்கள் ; பேரவையின் 33 ஆம் ஆண்டு தமிழ்விழா 


அமெரிக்கா  2020 பிப்ரவரி 15 ;உதவும் இதயங்கள் ; பேரவையின் 33 ஆம் ஆண்டு தமிழ்விழா: 2020 பேரவை விழாவினை - அட்லாண்டா மாநகர தமிழ்ச்சங்கம் எடுத்து நடத்துவது தாங்கள் ஏற்கனவே அறிந்த சேதிதான். 
இந்த விழாவை 10-வது உலகத் தமிழ் மாநாட்டைப் போலவே மிகச் சிறப்பாக நடத்த அட்லாண்டா வாழ் தமிழர்கள் உறுதி பூண்டு பணிகளை முன்னெடுத்து வருகிறார்கள். இவ்விழாவிற்கான அறிவிப்புச் சுட்டியை இங்கே காண்க. இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.அருவி வெளியீடு: பேரவையின் சார்பாக வெளிவரும் காலாண்டு மலரான அருவியின் அடுத்த சில இதழ்கள், சோதனை முறையில், மின்வடிவில் மட்டும் வெளிவர இருக்கின்றன. பேரவையின் இணையதளத்தில் 2019 ஆம் ஆண்டின் இலையுதிர் மலரின் மின்வடிவம் https://fetna.org/aruvi-ilayudhir-malar-2019-2/ எனும் முகவரியில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதனை படித்து பயனடைவதோடு மற்ற தமிழுறவுகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.உதவும் இதயங்கள்: தமிழர்கள் நாம் புலம்பெயர்ந்து அமெரிக்க மண்ணில் நல்வாழ்வு வாழ்வதோடு பல வரலாறுகளையும் படைத்து வருகிறோம். அதேநேரம் எத்தனையோ சவால்களையும் சந்தித்து வருகிறோம். குறிப்பாக அமெரிக்காவில் நம் தமிழ்ச் சமுதாயத்தில் எதிர்பாராத விபத்து அல்லது மரணம் நிகழும்போது நாம் சந்திக்கும் சவால்களை வார்த்தைகளால் சொல்ல இயலாது! நாம் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நிற்போம்! அத்தகைய அசாதாரண சூழலில் உதவிட பேரவை (FETNA) தொடங்கியுள்ள குழுதான் "உதவும் இதயங்கள்". இது போன்ற தருணங்களில் இந்த குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள். 24x7 என முழுநேரமும் உதவ தயார் நிலையில் இருக்கும் "உதவும் இதயங்கள்" குழுவை அணுக 1-866-FETNA-HH (1-866-338-6244) எனும் தொலைபேசி எண்ணை அழைக்கவும்.
சச்சிதானந்தன் வெங்கடகிருஷ்ணன்,பேரவை இணைச்செயலாளர்,பேரவைச் செயற்குழு சார்பாக‌ வெளியிட்டுள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo