Onetamil News Logo

அரசு அதிகாரிகள் காலை 9 மணிக்கு அலுவலகம் வரவில்லையென்றால் சம்பளம் கட் 

Onetamil News
 

அரசு அதிகாரிகள் காலை 9 மணிக்கு அலுவலகம் வரவில்லையென்றால் சம்பளம் கட் 


உத்திரபிரதேச மாநிலம்  2019 ஜூலை 6 ;உத்திரபிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரிகள் காலை 9 மணிக்கு சரியாக அலுவலகம் வரவேண்டும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். சரியாக வரவில்லை என்றால் சம்பளம் ‘கட்’ செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 
அரசின் பல்வேறு துறைகளில் லஞ்ச ஊழல் தலைவிரித்தாடுவது, அந்த மாநில அரசுக்கு தொடர்ந்து பெரும் பிரச்சனையாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஊழல் குற்ற சாட்டில் சிக்கித் தவித்து வரும் அந்த மாநிலத்தின் 600க்கும் மேற்பட்டோர் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசு முடிவு செய்தது. ஊழலில் ஈடுபடுவோர், சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் யோகி ஆதித்யநாத் கடந்த மாதம் உத்தரவிட்டார். 
சுமார் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள சுமார் 400 பேர் மீது, பணியிடமாற்றம், ஊதிய உயர்வு பதவி உயர்வு போன்றவை ரத்து உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. கட்டாய பணி பெறுபவர்களிலும், லஞ்ச ஊழலில் ஈடுபட்டோரிலும் சில கலெக்டர்களும், ஐ.பி.எஸ் அதிகாரிகளும் கூட இடம் பெற்றிருக்கிறார்களாம்.
இவர்கள் மீதான தண்டனையை மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரைத்து உள்ளது. இதற்கிடையே ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய  50 பேருக்கு கட்டாய பணி ஓய்வு வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo