Onetamil News Logo

நாணல்காடு இசக்கிபாண்டி கொலை வழக்கில் 2 பேர் கைது ;6 பேருக்கு போலீஸ் வலை வீச்சு 

Onetamil News
 

நாணல்காடு இசக்கிபாண்டி கொலை வழக்கில் 2 பேர் கைது ;6 பேருக்கு போலீஸ் வலை வீச்சு 


வல்லநாடு 2019 செப் 13 ;வல்லநாடு அருகே நாணல்காடு இசக்கிபாண்டி கொலை வழக்கில் 2 பேர் கைது ;6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே அகரத்தை அடுத்த நாணல்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் இசக்கிபாண்டி (வயது 27). இவர் அப்பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வந்தார். மேலும் அவர் மாடுகளை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தார்.இவர் நேற்று மாலையில் வல்லநாட்டுக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அவர் இரவில் அங்கிருந்து தனது ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.நெல்லை அருகே உள்ள முறப்பநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தை அடுத்த அகரம் விலக்கு அருகில் வந்தபோது, அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மறைந்து இருந்த மர்மநபர்கள் திடீரென்று இசக்கிபாண்டியை வழிமறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இசக்கிபாண்டி அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனாலும் மர்மநபர்கள் இசக்கிபாண்டியை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.நெல்லை-தூத்துக்குடி நாற்கரசாலையில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த கொலை சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து முறப்பநாடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இசக்கிபாண்டியை கொலை செய்தவர்கள் முன்விரோதம் காரணமாக கொலை செய்துள்ளனர் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து  திருநெல்வேலி அருகே உள்ள தச்சநல்லுார் பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து இவர் பல்வேறு  கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. கொலையுண்ட இசக்கிபாண்டி ரவுடி பேச்சிமுத்துக்கு அடைக்கலம் கொடுத்து வந்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் பேச்சிமுத்துவின் எதிரிகள் 8 பேர் நேற்று இரவு  இசக்கிபாண்டியை பாலத்தில் வழிமறித்து பேச்சிமுத்துவிற்கு அடைக்கலம் கொடுத்தது குறித்து  அவர்களுக்குள் வாய்த் தகராறு முற்றியதில் அவர்கள் 8 பேர் சேர்ந்து இசக்கிபாண்டியை அரிவாளால் கை,தலையில் வெட்டியதில் அவர் உயிரிழந்தார். இது குறித்து முறப்பநாடு காவல் நிலைய  போலீசார் தச்சை எஸ்டேட் பகுதியை சேர்ந்த மாரி (37), படுகையூர் பகுதியை சேர்ந்த பாலன் (35) ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடையதாக படுகையூர் முருகன் உட்பட 6 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். ஸ்ரீவைகுண்டம் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார், முறப்பநாடு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார்  பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo