Onetamil News Logo

முறப்பநாடு வேல்முருகன் கொலை வழக்கில் ஒருவர் கைது ;14 செண்ட் நிலப்பிரச்சனையால் கொலை 

Onetamil News
 

முறப்பநாடு வேல்முருகன் கொலை வழக்கில் ஒருவர் கைது ;14 செண்ட் நிலப்பிரச்சனையால் கொலை 


தூத்துக்குடி  2019 ஆகஸ்ட் 13 ;தூத்துக்குடி மாவட்டம் ,ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட முறப்பநாடு, சென்னல்பட்டி  தெற்கு தெருவைச்சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் வேல்முருகன் (29) என்பவருக்கும் அதே ஊரைச்சேர்ந்த மற்றொரு சண்முகம் என்பவரின் மகன் செல்வம் (25) என்பவருக்கும் சென்னல்பட்டியில் உள்ள 14 செண்ட் நிலம் சம்மந்தமாக பிரச்சனை இருந்து வந்திருக்கிறது.  
கடந்த 11.08.2019 அன்று காலை 10 மணிக்கு செல்வம் மற்றும் சிலர் வேல்முருகன் வீட்டிற்குச் சென்று நிலப்பிரச்சனை சம்மந்தமாக பேச்சு வார்த்தை வருமாறு அழைத்து செல்வம் வீட்டில் வைத்து வேல்முருகனை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். 
இது குறித்து வேல்முருகன் தந்தை சண்முகம் (60) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் முறப்பநாடு காவல் நிலைய பொறுப்பு காவல் ஆய்வாளர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து எதிரி செல்வம் என்பவரை கைது செய்து திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் இளங்கோவன் முன் ஆஜர்படுத்தி, அவர் உத்தரவின்பேரில் பாளையங்கோட்டை சிறையிலடைத்தனர். 
மேலும் இவ்வழக்கு சம்மந்தமாக முறப்பநாடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo