Onetamil News Logo

வல்லநாடு அருகே  பதட்டம் போலீஸ் குவிப்பு பேருந்தில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு   

Onetamil News
 

வல்லநாடு அருகே  பதட்டம் போலீஸ் குவிப்பு பேருந்தில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு         


வல்லநாடு 2019 அக்டோபர் 10 ;வல்லநாடு அருகே  பதட்டம் போலீஸ் குவிப்பு பேருந்தில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. 
 தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள கிள்ளிக்குளத்தில் இருந்து நெல்லைக்கு  இரவில் அரசு பஸ் புறப்பட்டு சென்றது. கிள்ளிக்குளம் அருகில் சென்றபோது, மர்மநபர்கள் அந்த பஸ்சை வழித்து ஏறினார்கள்.மணக்கரை  கிராமத்தில்  பதட்டம் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. 
பேருந்து  சிறிது தூரம் சென்றபோது, அந்த மர்மநபர்கள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் பஸ்சில் பயணம் செய்த ஒருவரை சரமாரியாக வெட்டினார்கள். இதில் பலத்த வெட்டுக்காயம் அவர்  ரத்த வெள்ளத்தில் அலறினார்கள். இதை பார்த்த பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். இதனால் டிரைவர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார். பின்னர் மர்மநபர்கள் பேருந்தில்  இருந்து கீழே இறங்கி அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டனர்.இதுகுறித்து உடனடியாக முறப்பாடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்தவரை  மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் விசாரணையில் 
தூத்துக்குடி மாவட்டம்,வல்லநாடு அருகே  பேருந்தில் பயணித்த மணக்கரை கிராமத்தை சேர்ந்த கணபதி(55) என்பவர் பேருந்தில் பயணித்த பொழுது ,முன் விரோதத்தால் அரிவாள் வெட்டு விழுந்தது. மணக்கரை கிராமத்தில் பதட்டம் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.மேலும் அரிவாள் வெட்டில் காயம் அடைந்த  மணக்கரை கிராமத்தை சேர்ந்த கணபதி (55)என்பவர் பேருந்தில் பயணித்த பொழுது ,முன் விரோதத்தால் அரிவாள் வெட்டு விழுந்தது கிள்ளிக்குளம் பகுதி வல்லநாடு அருகே உள்ளது. வல்லநாட்டில் கடந்த சில மாதங்களில் முன்விரோதம் காரணமாக அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடந்தன. கொலையில் தொடர்புடைய யாரேனும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து  வல்லநாடு பகுதியில் மீண்டும் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.  அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo