Onetamil News Logo

வீரன் சுந்தரலிங்கம் 220 நினைவு தினம் ;சுதந்திர போராட்ட தியாகி வீரன் சுந்தரலிங்கனார் பேரவை நிறுவன தலைவர் எல்.கே.முருகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.  

Onetamil News
 

வீரன் சுந்தரலிங்கம் 220 நினைவு தினம் ;சுதந்திர போராட்ட தியாகி வீரன் சுந்தரலிங்கனார் பேரவை நிறுவன தலைவர் எல்.கே.முருகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.  


ஓட்டப்பிடாரம்  2019 செப் 8 ; ஆங்கிலேயருக்கு எதிராக உலக வரலாற்றில் முதல் தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய வீரன் சுந்தரலிங்க தேவேந்திரனார்  220 நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.இதில்  பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
ஓட்டப்பிடாரம் கவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்கனாரின்  220 நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது; கவர்னகிரி யில் உள்ள வீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் எல்.கே.முருகன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
குதிரை வீரன் சுந்தரலிங்க தேவேந்திரனார் என்ற மாவீரன் கிபி 1799 இல் நடந்த பாஞ்சை போரில் ஆங்கிலேயரை எதிர்த்து ஒரு நாள் படைத்தலைவனாக முதன் முதலில் கட்டபொம்மனின் கோட்டையை காத்த முதல் தளபதியாவார்.இவர் அண்டை நாட்டு பட்டக்குதிரையை அடக்கிய மாவீரன் ஆவார். அக்குதிரை அவர் இறப்பு வரை அவரை மட்டுமே சுமந்து வந்தது. தேவேந்திரரின் இறப்போடு அதுவும் தீயில் உயிரை விட்டு மாண்டது.  
 தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம்  கவர்னகிரி-யில்  சுதந்திர போராட்ட தியாகி வீரன் சுந்தரலிங்கனாரின் 220 நினைவு தினத்தை முன்னிட்டு கவர்னகிரியில் உள்ள வீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு  சுதந்திர போராட்ட தியாகி வீரன் சுந்தரலிங்கனார் பேரவை நிறுவன தலைவர் எல்.கே.முருகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 
                                  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo