Onetamil News Logo

வேளாங்கன்னி பேராலய ஆண்டுப்பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது, லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு  

Onetamil News
 

வேளாங்கன்னி பேராலய ஆண்டுப்பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது, லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு  


 

வேளாங்கன்னி 2018 30 ஆகஸ்ட் 30 ;வேளாங்கன்னி பேராலய ஆண்டுப்பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது, லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். 
 கீழ்த்திசை நாடுகளின் புனித லூர்து நகரம் என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய வேளாங்கன்னி பேராலயத்தின் ஆண்டுப்பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்டு 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக புனித ஆரோக்கிய மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஆலயத்திலிருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியே எடுத்துவரப்பட்டு பின்னர் ஆலயத்தை வந்தடைந்தது. பின்னர் கொடியை தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்துவைத்தார். சிறப்புத்திருப்பலி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. கொடி உச்சியை அடைந்ததும், ஒரே நேரத்தில் ஆலயத்தின் விளக்குகள் ஏற்றப்பட்டு, வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டது. வாண வேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது. கொடியேற்று நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். ஆண்டுப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி அடுத்த மாதம் 7ம் தேதி நடைபெறுகின்றது. ஆண்டுப்பெருவிழாவை முன்னிட்டு, 10 நாட்களும் நவநாள் ஜெபம், மாதா மன்றாட்டு, கூட்டுப்பாடல் திருப்பலி, நற்கருணை ஆசிர், கொங்கனி, மலையாளம், தெலுங்கு, இந்தி கன்னடம் ஆகிய மொழிகளில் திருப்பலிகள் நடைபெறுகின்றன.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo