Onetamil News Logo

2023-க்குள் வீடில்லாத மக்களுக்கு தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் ;துணை முதல்வர் ஓபிஎஸ் பிரச்சாரம்   

Onetamil News
 

2023-க்குள் வீடில்லாத மக்களுக்கு தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் ;துணை முதல்வர் ஓபிஎஸ் பிரச்சாரம்   


ஆம்பூர்:  2019 ஆகஸ்ட் 2 ; தமிழகத்தில் 2023-க்குள் வீடில்லாத மக்களுக்கு தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் ;துணை முதல்வர் ஓபிஎஸ் பிரச்சாரம் என கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு வாக்கு சேகரிக்கும் விதமாக பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய ஓபிஎஸ் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஒரு மாநிலத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்யும் ஒரே இயக்கமாக, அதிமுக திகழ்வதாக குறிப்பிட்டார். முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வழியில் சிறப்பான ஆட்சியை அதிமுக அரசு அளித்து வருகிறது.
மறைந்த ஜெயலலிதா அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் தற்போதைய அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது. எக்காலத்திலும் 100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படாது என உறுதிபட கூறினார்.
திமுக பொருளாளர் துரைமுருகன் ஒரு மிகப்பெரிய நடிகர், பேசியே காரியத்தை சாதிப்பதில் வல்லவர். அவரை வேலூர் தொகுதி மக்கள் நம்ப வேண்டாம். ஏற்கெனவே திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் திமுகவுக்கு மீண்டும் வாக்களித்து ஏமாந்து விடாதீர்கள்.
வரும் 2023-ம் ஆண்டுக்குள் தமிழகம் குடிசை இல்லாத மாநிலமாக மாறும் என்றார். 2023-க்குள் வீடில்லாத மக்களுக்கு தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் எனவும் உறுதியளித்தார்.

தமிழகம் குடிசை பகுதிகளற்ற கிராமங்களாகவும், பேரூராட்சிகளாகவும், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளாக உருவாக்கப்படும் இதற்காக அடுத்தகட்டமாக 4.56 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்றார்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo