Onetamil News Logo

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணம் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது-இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறினார்.

Onetamil News
 

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணம் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது-இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறினார்.


வேலூர்  2018 நவம்பர் 8 ;பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணம் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது-இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறினார்.

வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டை அருகே உள்ள படவேட்டம்மன் கோவிலில் அத்வானி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் இந்துமக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தீபாவளி திருநாளில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்தும் 2 மணிநேரம் மட்டுமே வெடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்தும் அளித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்துகிறோம் என்ற பெயரில் காவல்துறை சார்பில் 1500க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார்.பட்டாசு வெடிப்பதை தேசத்துரோகம் போன்ற சூழலை காவல்துறை உருசாக்கியுள்ளது என்றும் பல நீதிமன்ற தீர்ப்புக்கள் நிலுவையில் உள்ள நிலையில் பட்டாசு வெடிப்பதற்கு மட்டும் காவல்துறை உடனடியாக வழக்கு பதிவு செய்வது ஏன் என்று கேட்ட அவர் இதற்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனக் கூறினார்.

பணமதிப்பிழப்பு இருவருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நாளான இன்று கருத்து தெரிவித்த அவர்,கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததால் கருப்பு பணம் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ள நிலை உருவாகி இருப்பதாக தெரிவித்தார்.இந்த பொருளாதார புரட்சிகரமான நடவடிக்கையால் கருப்பு பணமும் இலஞ்ச ஊழலும் முழுமையாக ஒழிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்............................................................................................ மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo