Onetamil News Logo

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து - மகன் பலி தாய் படுகாயம் - கொலை வழக்காக பதிவு செய்ய உறவினர்கள் துணைக்கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகை.

Onetamil News
 

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து - மகன் பலி தாய் படுகாயம் - கொலை வழக்காக பதிவு செய்ய உறவினர்கள் துணைக்கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகை.


வேலூர்  2018 நவம்பர் 8 ;இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து - மகன் பலி தாய் படுகாயம் - கொலை வழக்காக பதிவு செய்ய உறவினர்கள் துணைக்கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகை செய்தனர்.
வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அடுத்த பாரதி நகர் பகுதியை சேர்ந்தவரும் ஓட்டுநருமானவர் விஜிக்குமார்.சென்னையில் பணிபுரிந்து வரும் இவரது மனைவி சாந்தி மற்றும் மகன் சதீஷ்குமார்(28).நேற்றிரவு சதீஷ் அவரது தாய்க்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இருசக்கரவாகனத்தில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.ஆனால் எதிர்பாரதவிதமாக அவரது வாகனம் இராணிப்பேட்டை அருகே வந்த போது பின்னால் வந்த கார் பலமாக மோதியதில் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும் அவரது தாய் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.ஆனால் இது குறித்து அவரது உறவினர்கள் கூறுகையில்,திட்டமிட்ட கொலை என்றும் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.பாரதிநகர் பகுதியை சேர்ந்த விஜிக்குமாரின் மகனான சதீஷ்குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த திமுக பிரமுகருமான பரசுராமன் என்பவருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த முன்விரோதத்தால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று சதீஷ்குமாரின் இருசக்கர வாகனத்தில் மோதிய கார் பரசுராமனுக்கு சொந்தமானது என்பதால் கொலை செய்யும் நோக்கில் இந்த சம்பவம் நடந்திருப்பதால் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என்று அவரது உறவினர்கள் இராணிப்பேட்டை துணைக்கண்காணிப்பாளர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு புகார் மனுவினை துணைக்கண்காணிப்பாளரான கலைச்செல்வம் அளித்தனர்........................................................................................... மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo