Onetamil News Logo

வேலூர் மாவட்டம் சோளிங்கர் தனியார் திருமண மண்டபத்தில் சோளிங்கர் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

Onetamil News
 

வேலூர் மாவட்டம் சோளிங்கர் தனியார் திருமண மண்டபத்தில் சோளிங்கர் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டம்



வேலூர்  2018 நவம்பர் 8 ;வேலூர் மாவட்டம் சோளிங்கர் தனியார் திருமண மண்டபத்தில் சோளிங்கர் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டம் ஆளும் அதிமுக சார்பாக நடைபெற்றது இதில் தமிழக வணிகவரித்துறை அமைச்சர் கே சி வீரமணி தொழில்துறை அமைச்சர் சம்பத் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் கோ. ஹரி ,அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு வரும் சட்டமன்ற இடைத் தேர்தலை எப்படி எதிர் கொள்வது வாக்குகளை சேகரிக்க எந்த முறைகளை கையாள்வது என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினர் நிகழ்ச்சியின்போது பேசிய அமைச்சர் வீரமணி சசிகலா சிறைக்கு செல்லும் முன்னர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட அல்லாத தினகரனை அவசர அவசரமாக துணைப் பொதுச் செயலாளராக அறிவித்துவிட்டு சிறைக்கு சென்றார் அடிப்படை உறுப்பினர் கூட இல்லாத தினகரன் பொறுப்பில் அமர்த்த பட்டதற்கு அதிமுக என்ன அவர் குடும்ப சொத்தா என கேள்வி எழுப்பினார் மேலும் ஜெயலலிதாவின் இறப்பு காரணமானவர் சசிகலா என்றும் தன்னுடைய கணவர் நடராஜன் உடல்நிலை சரியில்லாதபோது ஹெலிகாப்டர் மூலம் அவருக்கு தேவையான உடல் உறுப்புகளை வரவழைத்து சிகிச்சை அளித்த சசிகலா ஜெயலலிதாவை ஏன் வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கவில்லை அப்படி அழைத்துச் சென்றிருந்தால் இன்று ஜெயலலிதா உயிரோடு இருந்திருப்பார் என தெரிவித்தார் தொடர்ந்து பேசிய தமிழக தொழில் துறை அமைச்சர் சம்பத் நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தல் அதிமுக அரசுக்கு மிகப் பெரிய சவால் என்று தெரிவித்தார் மேலும் தேர்தல் முடிவுகளை  அனைத்து தலைவர்களும் எதிர்நோக்கியுள்ளதாகவும் இடைத்தேர்தலின் வெற்றியில்தான் அதிமுகவின் எதிர்காலமே உள்ளது என தெரிவித்தார் மேலும் சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறும் என தெரிவித்தார் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo