Onetamil News Logo

‘அண்ணாதுரை’ படத்தில் புதிய அவதாரம் எடுத்த விஜய் ஆண்டனி

Onetamil News
 

‘அண்ணாதுரை’ படத்தில் புதிய அவதாரம் எடுத்த விஜய் ஆண்டனி


இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜய் ஆண்டனி தற்போது நடிகராக வலம் வருகிறார். பாடகர், தயாரிப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி அடுத்ததாக புதிய அவதாரம் ஒன்றை எடுத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, அடுத்ததாக பாடகர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமைகளின் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார். அவரது நடிப்பில் வெளியாகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றிபெற்று வரும் நிலையில், விஜய் ஆண்டனி தற்போது ‘அண்ணாதுரை’ மற்றும் `காளி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் நேற்று வெளியானது.
இதில் ‘அண்ணாதுரை’ படத்தில் புதிய முயற்சியாக படத்தின் படத்தொகுப்பு (Editing) பணிகளை விஜய் ஆண்டனியே மேற்கொள்வதாக கூறப்படுகிறது. இதன்மூலம் விஜய் ஆண்டனி ஒரு எடிட்டராகவும் வலம் வர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
  நமது நிருபர்,-- ஆ.மா.அருண் விஜய் காந்தி
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo