விளாத்திகுளம்,எட்டையாபுரம், குளத்தூர் ஆகிய மூன்று பஜார்களில் தைத் திருநாளை ஒட்டி விளாத்திகுளம் டிஎஸ்பி.பிரகாஷ் உத்தரவில் பொதுமக்களின் அனைத்து பாதுகாப்பிற்காக ஒலி, ஒளி ஏற்பாடு
விளாத்திகுளம் 2021 ஜனவரி 13 ;தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட விளாத்திகுளம், எட்டையாபுரம்,குளத்தூர் ஆகிய மூன்று பஜார்களில் தைத் திருநாளை ஒட்டி விளாத்திகுளம் டிஎஸ்பி.பிரகாஷ் உத்தரவில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக ஒலி, ஒளி ஏற்பாடு செய்திட உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி இன்று விளாத்திகுளம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களான விளாத்திகுளம், எட்டையாபுரம், குளத்தூர் ஆகிய மூன்று பஜார்களில் தைத் திருநாளை ஒட்டி பொதுமக்களின் பாதுகாப்பிற்காக விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்களின் உத்தரவின் பேரில் மூன்று பஜார்களிலும் புறக்காவல் நிலையம் அமைத்தும்,புறக் காவல் நிலையங்களில் ஒலி, ஒளி ஏற்பாடு செய்தும், 24 மணி நேரமும் தைத் திருநாளையொட்டி பஜார்களுக்கு வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.