Onetamil News Logo

விளாத்திகுளத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் 11 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி, வழங்கினார்.

Onetamil News
 

விளாத்திகுளத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் 11 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை
கலெக்டர் சந்தீப் நந்தூரி,  வழங்கினார்.


தூத்துக்குடி 2019 ஜூன் 21 ; தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் 5 நபர்களுக்கு ரூ.1.10 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 6 நபர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான ஆணை என மொத்தம் 11 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தலைமையில் 1428ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிகழ்ச்சி இன்று (20.06.2019) நடைபெற்றது.
                                                                                                                                           இன்று சிவஞானபுரம்; குறுவட்டம் கே.குமரெட்டையாபுரம், ஏ.சுப்பிரமணியபுரம், வீரபாண்டியாபுரம், மார்த்தாண்டம்பட்டி, அயன்செங்கல்படை, கூத்தலூரணி, வெள்ளையம்மாள்புரம், விளாத்திகுளம் குறுவட்டம் குறுவார்பட்டி, கீழவிளாத்திகுளம் பகுதி 1, கீழவிளாத்திகுளம் பகுதி 2 ஆகிய கிராமங்களை சேர்ந்த வருவாய் கணக்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார். மேலும் இப்பகுதி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

மேலும், முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் 5 நபர்களுக்கு ரூ.1.10 இலட்சம் நலத்திட்ட உதவிகளையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 6 நபர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான ஆணை என மொத்தம் 11 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் விளாத்திகுளம் வட்டாட்சியர் ராஜ்குமார், தலைமையிடத்து வட்டாட்சியர் நிஷாந்தினி, துணை வட்டாட்சியர் ரத்தினசங்கர், சுசீலா, வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணகுமார்,  சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் கணேசன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo