Onetamil News Logo

இசைமேதை நல்லப்ப சுவாமிகள் திருவுருவ படத்தை முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் . 

Onetamil News
 

இசைமேதை நல்லப்ப சுவாமிகள் திருவுருவ படத்தை முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் . 


தூத்துக்குடி 2020 ஜூன்  1 ; தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில்  ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இசைமேதை நல்லப்ப சுவாமிகள் நினைவுத்தூணை  தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  விளாத்திகுளம் இசைமேதை நல்லப்ப சுவாமிகள் நினைவுத்தூணில் வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இசைமேதை நல்லப்ப சுவாமிகள் நினைவுத்தூணை  தமிழ்நாடு முதலமைச்சர்  செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் இன்று (01.06.2020) திறந்து வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ , தலைமை செயலாளர் க.சண்முகம்,செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் பொ.சங்கர், ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
 விளாத்திகுளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள்  இசைமேதை நல்லப்ப சுவாமிகள் நினைவுத்தூணில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இசைமேதை நல்லசுவாமி அவர்களுக்கு நினைவுத்தூhண் அமைக்க வேண்டும் என்ற இப்பகுதி மக்கள் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்தார்கள், இந்த கோரிக்கையை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கவனத்திற்கு கொண்டு சென்று செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ரூ.20 லட்சம் மதிப்பில் விளாத்திகுளத்தில் இசைமேதை நல்லப்ப சுவாமிகள் நினைவுத்தூண் அமைக்கப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
இசைமேதை நல்லப்ப சுவாமிகள் நினைவுத்தூண் மேடை பரப்பு 18 ஓ 18 ஓ 5 அடியும், நினைவுத்தூண் பரப்பு  14 ஓ 14 ஓ 5 அடி ஆகும். மேலும் 15 சென்ட் பரப்பிலான காம்பவுண்டும் அமைக்கப்பட்டுள்ளது. இன்று இசைமேதை நல்லப்ப சுவாமிகள் நினைவுத்தூணை  தமிழ்நாடு முதலமைச்சர்  காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நானும் (மாவட்ட ஆட்சித்தலைவரும்) விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பின் மற்றும் இசைமேதை நல்லப்ப சுவாமிகள் வம்சாவழியினர் மற்றும் சங்க உறுப்பினர்கள் இசைமேதை நல்லப்ப சுவாமிகள் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  கடந்த ஆண்டு அரசாணை வெளியிட்டதுடன் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்களால் நினைவுதூண் அமைக்கம் பணிகள் துவக்கி வைக்கப்பட்டது.  இப்பகுதி மக்களின் கோரிக்கையினை அடுத்து இங்கு மேலும் நினைவுதூண் அமைந்துள்ள வளாகத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் இசை பள்ளி அமைக்க தேவையான கட்டிடம் கட்டுவதற்காக மதிப்பிடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உத்தரவு பெற்றதுடன் இதற்கான பணிகள் துவங்கப்பட்டு அடுத்து அண்டுக்குள் நிறைவு பெறும்.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி இன்று முதல் பல்வேறு தளர்வகள் நமது மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ளது. அரசு பேருந்துகள் 50 சதவிதம் இயக்கப்பட்டுள்ளது.  தனியார் பேருந்துக்ள இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வருகை தரும் நபர்களை கண்காணிக்க 15 இடங்களில் காவல் துறை சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வெளி மாநிலத்தில் இருந்து வருகை தரும் நபர்களை கொரான்டைன் முகாமில் தங்க வைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படும். சென்னை மாவட்டத்தில் இருந்து வருகை தரும் நபர்களையும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள அரசு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் பரிசோதனைகள் செய்யப்படுகிறது.  நாளை 02.06.2020 அன்று இலங்கை நாட்டு கொழும்பில் இருந்து 700 பயணிகள் கப்பல் மூலம் நமது மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்கள்.  இவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அழைத்;து செல்ல பேருந்து வசதிகளை ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இன்று நமது மாவட்டத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் பீகார் மாநிலத்திற்கு பல்வேறு தொழிலாளர்களை அனுப்பி வைக்கும் நிழ்ச்சி நடைபெற உள்ளது. நாளை 02.06.2020 மேற்குவங்கம் மாநிலத்திற்கு தொழிலாளர்களை அனுப்பி வைக்கும் நிழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதுவரை நமது மாவட்டத்தில் இருந்து 2,500 தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டள்ளது.  பிற மாநிலத்திலத்தை சேர்ந்த 8,700 தொழிலாளர்கள் நமது மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார்கள். தங்களது சொந்த மாநிலத்திற்கு செல்ல விருப்பம் தெரிவித்து, பதிவு செய்யதுள்ள தொழிலாளர்களை அனுப்பும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  1,500 தொழிலாhள்கள் இன்றும் சில நாட்களில் அவர்களது சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாலத்தீவு நாட்டில் இருந்து வருகிற 7ம் தேதியும், ஈரான் நாட்டில் இருந்து வருகிற 21ம் தேதியும் கப்பல் மூலம் பயணிகள் நமது மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்கள். 
தமிழ்நாடு முதலமைச்சர்  8 மண்டலங்களாக மாவட்டங்களை பிரித்து அறிவித்துள்ளார்கள்.  தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்குள் செல்ல இ பாஸ் தேவையில்லை.  ஒரு மண்டலத்தில் இருந்து இன்னொரு மண்டலத்திற்கு செல்ல இ பாஸ் மூலம் அனுமதி பெற வேண்டும்.  அரசு தெரிவித்துள்ள விதிமுறைகளை முழுமையாக பொதுமக்கள் பின்பற்றி கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்றிட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார். 
நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) எம்.பிரித்திவிராஜ்,கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன், பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் கட்டுமானம் செயற்பொறியாளர் ஜெயராமன், உதவி பொறியாளர்கள் கங்கா, சந்திரசேகர், விளாத்திகுளம் வட்டாட்சியர் ராஜ்குமார், மாவட்ட கவுன்சிலர் நடராஜன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தனவதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், முத்துக்குமார், செயல் அலுவலர் தனசிங், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) சையத் முஹம்மத், முக்கிய பிரமுகர்கள்  ஞானகுருசாமி, தனஞ்ஜெயின், எம்.கே.பெருமாள், பால்ராஜ், .நெப்போலியன், ஆண்டி, ரவீந்திரன்,எம்.கே.பி.வரதபெருமாள், ஜெயவேல், கந்தவேல், ராமநாதன், சுபாஷ் சந்திரபோஸ், சேதுபாண்டியன், செம்பகபெருமாள், பசும்பொன் பழனிசாமி, ஆவுடையப்பன், முனியசாமி, வேலவன், கரும்பூர் சீனி, விளாத்திகுளம் இசைமேதை நல்லப்ப சுவாமி ஆன்மிக கலை இலக்கிய இசை மன்றம் தலைவர் துறைஅரசன், சுவமிகளின் வரலாறு நூல் ஆசிரியர் சிவக்குமார், பாஞ்சாலங்குறிச்சி வீரசக்க தேவி ஆலய கமிட்டி உறுப்பினர் முருகபூபதி, புதூர் வட்டார இராஜகம்பள மகாஜன சங்கம் தலைவர் பெருமாள் நாயக்கர், செயலாளர் சேதுபாண்டியன், பொருளாளர் பெரியபூசு, தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் தலைவர் கண்ணன், நிர்வாகிகள் ஜெயராஜ், சந்திரன், ராமலிங்கம், சங்கரவேலு, கணேசமூர்த்தி மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo