Onetamil News Logo

கோவில்பட்டி-விளாத்திகுளம் அருகே 2 சிறுவர்களை கிணற்றில் தள்ளி கொலையா ? சிறுவர்களின் சித்தப்பாவிடம் போலீசார் விசாரணை

Onetamil News
 

கோவில்பட்டி  விளாத்திகுளம் அருகே 2 சிறுவர்களை கிணற்றில் தள்ளி கொலையா? சிறுவர்களின் சித்தப்பாவிடம் போலீசார் விசாரணை


தூத்துக்குடி, 2020 மார்ச் 22 ;தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன்பொம்மையாபுரத்தைச் சேர்ந்தவர் ஜோதி முத்து. லாரி டிரைவரான இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி உஷாராணி. இவருக்கு சீமான் அல்போன்ஸ் மைக்கிள் (வயது 14) என்ற மகன் உண்டு. 2-வது மனைவி மகாலட்சுமிக்கு எட்வின் ஜோசப் (9) என்ற மகன் உண்டு.
இதில் சீமான் அல்போன்ஸ் மைக்கிள் விளாத்திகுளத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். எட்வின் ஜோசப் அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.இந்த நிலையில் நேற்று இவர்களுடைய உறவினர் ஒருவர் 2 சிறுவர்களையும் அங்குள்ள கிணற்றில் குளிப்பதற்காக அழைத்து சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிறுவர்கள் மட்டும் கிணற்றில் குளித்துக் கொண்டு இருந்தனர்.வெகுநேரம் ஆகியும் சிறுவர்கள் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கிணற்றுக்கு சென்று தேடிப்பார்த்தனர். அப்போது, கிணற்றில் சிறுவர்களின் செருப்பு மிதந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து விளாத்திகுளம் போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி தேடினார்கள். அப்போது, எட்வின் ஜோசப் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவனது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். ஆனால் சீமான் அல்போன்ஸ் மைக்கிளை தேடினார்கள். ஆனால் அவனது உடல் கிடைக்கவில்லை. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அவனது உடலை தேடி வருகிறார்கள்.இதற்கிடையே, போலீசார் எட்வின் ஜோசப் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஜோதிமுத்து சகோதாரர் ரத்தினம் என்பவரை விளாத்திகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சிறுவன் எட்வின் ஜோசப் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர். வெளிச்சம் இல்லாத காரணத்தால் மற்றொரு சிறுவன் உடலை மீட்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo