Onetamil News Logo

விளாத்திகுளம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் மற்றும் தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கான தேர்தலில் விளாத்திகுளம் தொகுதியில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

Onetamil News
 

விளாத்திகுளம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் மற்றும் தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கான தேர்தலில் விளாத்திகுளம் தொகுதியில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.


விளாத்திகுளம் 2019 ஏப்ரல் 18 ;விளாத்திகுளம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் மற்றும் தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கான தேர்தலில் விளாத்திகுளம் தொகுதியில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
விளாத்திகுளம் தொகுதியில் மொத்தம் 259 வாக்குச்சவாடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டிருந்தது. காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பும், பலத்த பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. வாக்குப்பதிவையொட்டி காலை 7 மணி முதலே பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என நீண்ட வரிசையில் வாக்குச்சாவடி முன்பு காத்திருந்து வாக்குப்பதிவை செய்தனர். ஒருசில பகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. காலை 9 மணிக்கு பிறகு வாக்குப்பதிவு சதவீதம் விறுவிறுப்பாக உயர தொடங்கியது. காலை 11 மணியளவில் 14.87 சதவீதமும், மதியம் 1 மணியளவில் வாக்கு சதவீதம் 39.28 ஆகவும், பிற்பகல் 3 மணியளவில் 53.98 சதவீதமாகவும் உயர்ந்தது. மாலை 5 மணியளவில் 66 சதவீதமாக இருந்தது. வன்முறை சம்பவங்கள் குறிப்பிடும்படியாக எதுவும் நடைபெறவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பி.சின்னப்பன் கீழ விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு செய்தார்.
திமுக வேட்பாளர் வசந்தம் ஏ.சி. ஜெயக்குமார் அயன்பொம்மையாபுரம் செங்குந்தர் ராமலிங்கம் நடுநிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு செய்தார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் கோ.ஜோதிமணி விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு செய்தார்.
சுயேச்சையாக போட்டியிடும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஜீ.வி. மார்க்கண்டேயன் ராமச்சந்திராபுரம் என்.வி. சுப்பா ரெட்டியார் நடுநிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு செய்தார்.
நண்பகல் 12 மணியளவில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் எட்டயபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வருகை தந்து வாக்குப்பதிவு நிலவரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் அதிமுக, பாஜக நிர்வாகிகள் உடன் வருகை தந்திருந்தனர்.
மாலை 4 மணியளவில் திமுக வேட்பாளர் கனிமொழி விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு வருகை தந்து வாக்குப்பதிவு நிலவரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, நகர செயலர் வேலுச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் வருகை தந்திருந்தனர்.
விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட கடலையூர் மற்றும் கமலாபுரம் வாக்குச்சாவடிகளில் இருந்த மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் மாற்று இயந்திரம் வரும் வரை 50 நிமிடங்கள் வாக்குப்பதிவு தடைபட்டது. மாற்று இயந்திரம் கொண்டுவரப்பட்டு தொடர்ந்து வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo