விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை - உடனடியாக எதிரி கைது ; மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வை
தூத்துக்குடி 2021 ஜனவரி 17 ; தூத்துக்குடி மாவட்ட விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை - உடனடியாக எதிரி கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சத்யா நகரை சேர்ந்த பொன்னுச்சாமி மகன் சங்கர லிங்கம் (40), என்பவருக்கும் இவரது மைத்துனரான அதே பகுதியைச் சேர்ந்த செல்லையா மகன் மாரிமுத்து (46) என்பவருக்கும் குடும்பப் பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று (16.01.2021) காலை இந்த முன்விரோதம் காராணமாக சத்யா நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் முன்பு மாரிமுத்து என்பவர் சங்கரலிங்கத்திடம் தகராறு செய்து சுவரில் தள்ளி தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சங்கரலிங்கம் உயிரிழந்துள்ளார். இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விளாத்திக்கும் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்;ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டார். அவரது உத்தரவின் பேரில் விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் விளாத்திக்குளம் காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான காவல்துறையினர் கொலை செய்த மாரிமுத்துவை உடனடியாக கைது செய்தனர்.
எதிரி மாரிமுத்துவை உடனடியாக கைது செய்த விளாத்திக்குளம் காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போலீசாரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.