Onetamil News Logo

ஆரோக்கியமாக இருப்பது தான் உங்களுடைய குழந்தைகளுக்கு தரக்கூடிய பரிசு, சொத்து ;கனிமொழி எம்.பி.பேச்சு

Onetamil News
 

ஆரோக்கியமாக இருப்பது தான் உங்களுடைய குழந்தைகளுக்கு தரக்கூடிய பரிசு, சொத்து ;கனிமொழி எம்.பி.பேச்சு


விளாத்திகுளம் 2020 பிப்ரவரி 27 ;ஆரோக்கியமாக இருப்பது தான் உங்களுடைய குழந்தைகளுக்கு தரக்கூடிய பரிசு, சொத்து ;கனிமொழி எம்.பி.செய்தியாளர்களிடம் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மத்தியரசு மற்றும் தமிழக அரசு பொது சுகாத்துறை சார்பில் சுகாதார திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விழாவிற்கு கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் கிருஷ்ணலீலா தலைமை வகித்தார்.
இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து பேசுகையில் நகர்ப்புறங்களில் இருப்பவர்களுக்கு மருத்துவ வசதி எளிதில் கிடைக்கும், மருத்துவசதி கிடைக்காத கிராம மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வரும்முன் காப்போம் என்ற திட்டத்தினை உருவாக்கினார் என்றும்,கிராமங்களுக்கு மருத்துவம், மருத்துவர்களை கொண்டு போய் சேர்த்த திட்டம்,அந்த திட்டம் தான் இன்று வேறு பெயர்களில், வேறு வடிவங்களில் நடத்தப்படுகிறது என்றும், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் உங்கள் உடல் நலத்தினை பாதுகாத்து ஆரோக்கியமாக இருப்பது தான் உங்களுடைய குழந்தைகளுக்கு தரக்கூடிய பரிசு, சொத்து,உங்களால் தான் உங்கள் குடும்பத்தினை, குழந்தைகளை காப்பாற்ற முடியும் என்றும், பெண்கள், பள்ளிகளில் பயிலும் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிகளவில் இரத்த சோகை உள்ளது.சரியாக உண்ணுவதில்லை, சத்தான உணவுகளை நாம் சாப்பிடுவதில்லை என்றும் நம்மிடம் பணம், வசதி எல்லாம் இருந்தாலும் உடல் நலம், ஆரோக்கியம் தான் சொத்து, என்னுடைய தந்தை(மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி) 90வயதிலும் ஆரோக்கியத்துடன் இருந்த ஒரு தலைவர்,நாங்கள் அவரிடம் பல விஷயங்களை கற்றுக்கொண்டுள்ளோம்,கடைசி வரை மக்களுக்கு பணியாற்றக்கூடிய உடல் நலம், மன உறுதியும் இருந்த தலைவர் அவர்,உழைப்பது மட்டுமின்றி, உடல் நலத்திலும் அக்கறை கொண்டு காரணத்தினால் தான் 90வயதிற்கு மேலும் பணியாற்ற முடிந்தது என்றார்.
இதில் தூத்துக்குடி எம்.எல்.ஏ.கீதாஜீவன் மற்றும் அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கனிமொழி எம்.பி. விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சிகிச்சை பெற வந்தவர்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனை மேம்பாட்டிற்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்வதாக உறுதியளித்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo