Onetamil News Logo

கிராமங்களில் பழமை மாறாமல் பனை மரத்தில் கூடுகட்டி வாழும் சிட்டுகுருவிகள்

 
Onetamil News
Onetamil News
 
 

பண்ருட்டி, ஆக.21 : கடந்த 20 ஆண்டிற்கும் முன்னர் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் ஏராளளமான உணவு பயிர்கள் விவசாயம் செய்தனர். அப்போது பயிர்கள் அனைத்தும் நன்கு செழித்து வளர்ந்தன-. இதில் ஒவ்வொரு நிலத்தின் வழியாகவும், ஏரி கரைகளிலும் பனை மரங்கள் அதிகளவு வளர்ந்திருந்தன. இதுபோன்ற இடங்களில் சிட்டு குருவிகள் அதிகளவு கூடுகள் கட்டி வாழ்ந்தன. அதுவும் பனை, தென்னை மரங்களில் கொத்து கொத்தாக கூடுகள் கட்டி இருந்தது மாலை நேரத்தில் சூரியன் மறையும் வேளையில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக காட்சி அளிக்கும். பள்ளி மாணவர்கள் பள்ளியை விட்டு வீட்டிற்கு செல்லும்போது சிட்டுகுருவிகளின் சத்தம் கேட்டு ரசித்தவாறே செல்வார்கள். இவற்றை விரும்பாத மனிதர்கள் எவருமே இல்லை. அத்தனையும் அழகாக இருக்கும். காலபோக்கில் பனை மரங்களும் அழிந்தன. செல்போன் டவர்களின் கதிரியக்கங்களால் சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து வந்தன. ஆனால் பழைய நினைவுகளை மறவாமல் இன்று சிட்டுகுருவிகளை பாதுகாப்பதற்கு ஏராளமான கிராமங்களில் விவசாயிகள் ஆர்வமுடன் பாதுகாத்து வருகின்றனர். அதுபோன்று பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் கிராமம். இங்கு சிட்டு குருவிகளை அதிகளவு பார்க்க முடிகிறது. பனை மரம், மின்சார ஒயர்கள், ஓட்டு வீடுகள் ஆகியவற்றில் கூண்டுகள் கட்டி சிட்டுகுருவிகள் வாழ்ந்து வருகின்றன. இதனால் இந்த கிராமத்தில் சிட்டுகுருவி சத்தம் ஒலித்துகொண்டே உள்ளது. 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo