Onetamil News Logo

அரசு ஆசிரியர் பணியை துறந்து பெண் விடுதலை கட்சியை தொடங்கிய ஆசிரியை  சபரிமாலா ;பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக புதிய கட்சி தொடக்கம்

Onetamil News
 

அரசு ஆசிரியர் பணியை துறந்து பெண் விடுதலை கட்சியை தொடங்கிய ஆசிரியை  சபரிமாலா ;பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக புதிய கட்சி தொடக்கம்


விழுப்புரம் 2020 ஜூலை 16 ;விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா சிங்கனூரை சேர்ந்தவர் சபரிமாலா. இவர், நாகை மாவட்டம் சிக்கல் அடுத்த பனைமேட்டில் உள்ள தனது இல்லத்தில் ‘பெண் விடுதலை கட்சி’ என்ற புதிய கட்சியை நேற்று தொடங்கினார். கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து நிகழ்வதால் என் அரசு ஆசிரியர் பணியை துறந்து பெண் விடுதலை கட்சியை தொடங்கி உள்ளேன். பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும், தலை முறை மாற்றத்துக்காகவும் தொடங்கப்பட்டதே பெண் விடுதலை கட்சி என்றார்.
மாணவி அனிதாவின் மரணம் மிகப்பெரிய கல்வி எழுச்சியையும், தூங்க விடாத தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு காரணமான ‘நீட்’ தேர்வை ரத்து செய்யவும், இந்தியா முழுவதும் ஒரே கல்வி திட்டத்தை அமல்படுத்தக்கோரியும் நான் பணியாற்றிய எனது பள்ளி முன்பு மரத்தடியில் அமர்ந்து எனது மகனுடன் அமைதியான முறையில் சமூக கோபத்தை வெளிப்படுத்தினேன். இதற்கு நான் பார்க்கும் அரசு பணி தடையாக இருந்தது.
என்னுடைய சமூக கோபத்தை, சுதந்திர உணர்வை, தேச பக்தியை வெளிப்படுத்தக்கூடிய உணர்வை தடுக்கக்கூடிய அப்படிப்பட்ட அரசு பணி எனக்கு தேவையில்லை என முடிவு செய்து இந்த பணியை நான் மனவேதனையோடு ராஜினாமா செய்துள்ளேன்.
எனக்கு தற்போது 35 வயது ஆகிறது. இன்னும் 23 ஆண்டுகள் பணி செய்ய காலம் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நான் எடுத்துள்ள இந்த முடிவினால் ரூ.1½ கோடி பணப்பலன்களை இழக்க நேரிடுகிறது. என்னுடைய முடிவை சரி என்று யாருமே சொல்லவில்லை. வெள்ளையர்களை விரட்ட ஐ.ஏ.எஸ். பதவியை தூக்கி எறிந்துவிட்டு போராட்டம் நடத்திய நேதாஜி சுபாஷ் சந்திரபோசை மனதில் நினைத்து இந்த முடிவை எடுத்துள்ளேன்.என்றார் அன்று.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo