தூத்துக்குடி மேலூர் பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ;அறங்காவலர் குழு தலைவர் கீதா செல்வ மாரியப்பன் ஏற்பாடு
தூத்துக்குடி மேலூர் பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ;அறங்காவலர் குழு தலைவர் கீதா செல்வ மாரியப்பன் ஏற்பாடு
தூத்துக்குடி 2023 செப் 18 ;தூத்துக்குடி மேலூர் பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவானது கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் அறங்காவலர் குழு தலைவர் கீதா செல்வ மாரியப்பன் தலைமையில் போர்ட் சிட்டி பெனிஃபிட் பண்டு உரிமையாளர் சூரியமூர்த்தி முன்னிலையில் நிகழ்வானது காலை 8.30க்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது.
இதில் முன்னதாக யோகி ராம் சரத்குமார் ஆலயத்தில் பல்வேறு சடங்குகள் நடந்தது. அதற்கு பிறகு அங்கிருந்து ஊர்வலமாக மேலூர் ஸ்ரீபத்ரகாளி அம்மன் திருக்கோவில் உள்ள விநாயகர் சிலைக்கு முன்பாக பல்வேறு சடங்குகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். மேளதாளம் முழங்க இசைவாத்திய குழு அனைவரையும் ஈர்க்கும் அளவிற்கு வாசித்தனர். அனைவருக்கும் முடிவில் பிரசாதம் வழங்கப்பட்டது.