தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா ;ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.சரவணக்குமார் பங்கேற்று தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சியாக கொண்டாடப்பட்டது
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட பல கிராமங்களில் கொண்டாட்டம் நடந்தது.
இதில் இன்று வடக்கு சோட்டையின் தோப்பு, துரைசிங் நகர், இந்திரா நகர், மருத்துவர் நகர் போன்ற பகுதிகளில் அன்னதானம் நடைபெற்றது. இந்த அன்னதான நிகழ்விற்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.சரவணக்குமார் பங்கேற்று தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன் பாண்டி, ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, சேசு ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். துரைசிங்நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.இதில் கிளை செயலாளர் கருப்பசாமி பிரதிநிதி ராஜன் மற்றும் முனியசாமி ஊர் நிர்வாகிகள் பொதுமக்கள்,பங்குபெற்றனர்.
வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியில் தோப்பு விநாயகர் ஆலய சதுர்த்தி விழா இன்று நடைபெற்றது.வடக்கு சோட்டையன் தோப்பு ஆனந்த குமார், கருணாநிதி ஊர் நிர்வாகிகள் பொதுமக்கள் பங்குபெற்றனர் இங்கு 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது..
தாளமுத்து நகர் - இந்திராநகர் பகுதியில் கிளை செயலாளர் பொன்னுசாமி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் தங்கமாரிமுத்து, மாவட்ட பிரதிநிதி தர்மலிங்கம், ஒன்றிய துணை செயலாளர் ராமச்சந்திரன், இளைஞரணி ராஜேந்திரன், பொன்ராஜ் மற்றும் ஊர் நிர்வாகிகள் பொதுமக்கள் இளைஞரணி உட்பட 1000க்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர்.
மருத்துவர் நகர் பகுதியில் செல்வா விநாயகர் கோவிலில் கொண்டாட்டப்பட்டது.இதில் கிளை செயலாளர் முத்துகுமரன் மகளிரணி பாலா, ஜெஸிந்தா மற்றும் ஊர் நிர்வாகிகள் பொதுமக்கள் இளைஞரணி நிர்வாகிகள் பலர் பங்குபெற்றனர்.