Onetamil News Logo

விருதுநகரில் காமராஜர் சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை ; திருச்செந்தூர் அதிமுக பிரமுகர் வடமலைபாண்டியன் பங்கேற்று சிறப்பித்தார்.

Onetamil News
 

விருதுநகரில் காமராஜர் சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை ; திருச்செந்தூர் அதிமுக பிரமுகர் வடமலைபாண்டியன் பங்கேற்று சிறப்பித்தார்.


விருதுநகர்  2019 ஜூலை 15 ;விருதுநகர் மாவட்டம் கள்ளிக்குடியில் கட்டப்பட்ட காமராஜர் மணிமண்டபத்தை முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். கல்விக்கண் திறந்த காமராஜரின் 117வது பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா, மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை மையிட்டான்ப்பட்டி கிராமத்தில் பெருந்தலைவரின் காமராஜருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. 


பெருந்தலைவர் காமராஜர் கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை சார்பில் அதன் அறக்காவலர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆகியோர் மணிமண்டபத்தை அமைத்துள்ளனர். இந்த மணிமண்டபம் மற்றும் அணையா விளக்கு ஆகியவற்றை பெருந்தலைவர் காமராஜரின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் மணிமண்டபத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், அமைச்சர்கள், அதிகாரிகள், ராதிகா சரத்குமார் ஆகியோர் பங்கேற்றனர். 


இதனிடையே பெருந்தலைவர் காமராஜரின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள காமராஜரின் சிலைக்கு கீழே அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தை பொருளாதாரத்திலும் கல்வியிலும் உயர்த்திய மாபெரும் தலைவர் காமராஜ் என்று புகழாரம் சூட்டினார். இதற்கிடையில் விருதுநகரில் உள்ள காமராஜரின் நினைவு இல்லத்தில் அவரது உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சிவஞானம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


 விருதுநகரில் காமராஜர் மணிமண்டபத்தில் உள்ள  சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவருடன் திருச்செந்தூர் அதிமுக பிரமுகர் வடமலைபாண்டியன் பங்கேற்று சிறப்பித்தார்.

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo