Onetamil News Logo

தாதுமணல் தொழிலில் கொடிகட்டிப் பறந்த வி.வி.வைகுண்டராஜன் குற்றவாளி:டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் அறிவிப்பு ; சீமானின் திருமணத்துக்கு முதலில் வந்தவர் இதே வைகுண்டராஜன்

Onetamil News
 

தாதுமணல் தொழிலில் கொடிகட்டிப் பறந்த வி.வி.வைகுண்டராஜன் குற்றவாளி:டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் அறிவிப்பு ; சீமானின் திருமணத்துக்கு முதலில் வந்தவர் இதே வைகுண்டராஜன்


டெல்லி 2021 பிப்ரவரி 23 ;கிராமத்து அரிசி வியாபாரியாக வாழ்வினை தொடங்கிய அவர் உலகளாவிய அளவில் ஆயுத விற்பனைக்கு நிகரான தாதுமணல் தொழிலில் கரைகண்டதெல்லாம் பாராட்ட வேண்டிய விஷயம். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்.                                                                                                                                            
                   நெல்லை மாவட்டம்,தூத்துக்குடி மாவட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்,கடற்கரையோரப் பகுதிகளில் தாது மணல் ஆலைகள் செயல்பட்டுவந்தன. மணலிலிருந்து அரிய வகை தாதுக்களான இல்மனைட், கார்னெட், ரூடைல், சிலிகான் போன்றவற்றைப் பிரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த விவி  நிறுவனங்கள், கொள்ளை லாபம் சம்பாதித்தன.                                                                                                                      
                அணு உலைக்குப் பயன்படும் தோரியம் கலந்த மோனோசைட் தாது மணல் நெல்லை மாவட்டத்தில் கிடைக்கிறது. இந்தப் பகுதியில் கிடைக்கும் மணலிலிருந்து தாதுகளைப் பிரித்து விற்பனை செய்வதன் மூலம் தனி நபர்கள் கோடிக்கணக்கில் கொள்ளையடித்துவந்தனர்.
விதிமுறைகளை மீறி தாது மணல் கொள்ளையில் தனி நபர்கள் ஈடுபட்டதால், சுற்றுச்சூழல் பாதிப்புடன் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. அதனால் தனிநபர்கள் தாது மணல் அள்ள மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. மத்திய அரசின் நடவடிக்கையால் தென் மாவட்டங்களில் தாதுமணல் தொழிலில் கொடிகட்டிப் பறந்த வி.வி.மினரல் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தனியார் ஆலைகளும் மூடப்பட்டுக்கிடக்கின்றன.                                                                                                                                                                                                                                    
                     வி.வி.மினரல்ஸ் நிர்வாக இயக்குனர் வைகுண்டராஜன் மீது சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் அவர் பல்வேறு சதி செயல்கள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துதனக்கு சாதகமாக உதரவுகளைப் பெற்றது என பல குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு தண்டனை என்ன எவ்வளவு என்பது நாளை அறிவிக்கப்படும். தென்னகத்து அம்பானி வைகுண்டராஜனின் மேலான குற்றசாட்டில் அவர் குற்றவாளி என தீர்ப்பு கிடைத்திருப்பது உறுதிசெய்யபட்டிருக்கின்றது ஆனால் தண்டனை இன்னும் அறிவிக்கபடவில்லை
வைகுண்டராஜன் சுமார் 30 ஆண்டுகள் தென் தமிழகத்தை ஆட்டி வைத்தவர் சந்தேகமில்லை. அவரின் செல்வாக்கும் தொழிலும் பலமும் கொடிகட்டி பறந்தது, திரும்பும் திசையெல்லாம் காற்று அவருக்கு சாதகமாகவே வீசிற்று
வைகுண்டராஜனின் எழுச்சி 1990களில் ஜெயலலிதா அரசியலில் எழும் பொழுது தொடங்கிற்று, ஜெயாவின் மிகபெரிய பினாமி என அறியபட்டார், அதற்கேற்றார் போல டாடா நிறுவணம் விரட்டியடிப்பு உள்ளிட்ட பல சம்பவங்கள் நடந்தன‌
யாரும் தொடமுடியாத இடத்துக்கு சென்றுகொண்டிருந்தார் வைகுண்டராஜன்
பின்வந்த திமுக ஆட்சியில் கருணாநிதி அவரை குறிவைத்தார், எப்பொழுதுமே எதிர்கட்சியினை விட அவர்களுக்கு பின்புலமான தொழிலதிபர்களை பிடித்து சாத்துவது கருணாநிதி ஸ்டைல். மிக சரியாக தமிழக அரசு இயந்திரத்தை வைகுண்டராஜனை நோக்கி ஏவி கலைத்துவிட்டார் கருணாநிதி
அப்பொழுதுதான் வைகுண்டராஜன் 'உடன் பிறவா சகோதரர்" எனும் அளவில் ஜெயாடிவியின் பங்குதாரர் வைகுண்டராஜன் என தமிழகத்துக்கே அதிர்ச்சி கொடுத்தார் ஜெயா
ஆனாலும் தேர்ந்த தொழிலதிபரான வைகுண்டராஜன் கருணாநிதியினை சமாளித்தார், ஒரு கட்டத்தில் கருணாநிதியும் அவரை கண்டுகொள்ளவில்லை ஏதோ சரியாக புரிந்துணர்வு ஏற்பட்டது
கருணாநிதி நினைத்திருந்தால் தாதுமணலை முடக்கி இருக்கலாம் ஆனால் செய்யவில்லை ஏனென்றால் அதுதான் கருணாநிதி
இதன் பின் வைகுண்டராஜனின் டெல்லி செல்வாக்கு அதிகரித்தது, டெல்லியில் சிறந்த ஏற்றுமதியாளருக்கான விருதுகளை அடிக்கடி வாங்கினார், இந்தியாவின் நம்பர் 1 ஏற்றுமதி நிறுவணம் என ப.சிதம்பரம் கையாலே விருது வாங்கி திரும்பினார்
இப்படி அதிமுக, திமுக, காங்கிரஸ் என எல்லா கட்சிகளையும் சமாளித்து கொண்டிருந்த அண்ணாச்சி சமூக பலத்துக்காக பல காரியங்களையும் செய்தார்
சிவந்தி ஆதித்தன் குடும்பத்தின் பிடியில் இருந்த நாடார் அமைப்புகளை அடித்து பிடுங்கினார், மெர்கண்டைல் வங்கியில் தன் பிடியினை இறுக்கினார்
"ஆதித்தன்" என்பதே சோழநாட்டு அடையாளமல்லவா? பாண்டிய நாட்டில் அவர்களுக்கென்ன வேலை என்பது போல் அன்னார் தென்னகத்தை மீட்ட‌ பாண்டிய வாரிசாகவும் கொண்டாடபட்டார்.
வைகுண்டராஜனை எதிர்க்க யாராலும் முடியவில்லை கலெக்டர்கள் ஜோதி நிர்மலா ,ஆசிஷ்குமார் போன்றோர் பகிரங்கமாக எதிர்த்தார் அதுவும் சில நாட்களுக்கே,அவர்கள் மாற்றப்பட்டனர்.
திமுக அதிமுக என இரு ஆட்சியிலும் அவர் கொடி உயரபறந்து கொண்டிருந்தது
வைகுண்டராஜனை முதன் முதலில் கம்பீரமாக துணிச்சலாக எதிர்த்த ஒரே அரசியல்வாதி விஜயகாந்த் மட்டுமே, அதற்கு காரணம் ராதாபுரம் அந்நாளைய எம்.எல்.ஏவும் சிம்பு மேல் கொலை வெறியில் திரியும் அந்த மைக்கேல் ராயப்பன் என்பவர்
அவர் விஜயகாந்த் கட்சியில் இருந்து வென்று பதவி பெற்றார், ஆனால் ராதாபுரத்தில் அண்ணாச்சியின் ஆட்டத்துக்கு அடங்கி அவர் பின்னாலே போக அவர்க்கும் விஜயகாந்துக்கும் முட்டிற்று
இதன் பின்பே "விஜயகாந்த் வந்தேறி" என சீமான் மேடையெல்லாம் முழங்கினார், ஏன் முழங்கினார் என்றால் சீமானின் திருமணத்துக்கு முதலில் வந்தவர் இதே வைகுண்டராஜன்
இந்நிலையில் ஜெயலலிதா 2012க்கு பின் மெல்ல மாறினார், தனக்கு எதிராகவும் அல்லது தன் பெயரை பயன்படுத்தியும் தனக்கும் கட்சிக்கும் நாட்டுக்கும் துரோகம் செய்வோர் பட்டியல் அவருக்கு கிடைத்தது
அதில் வைகுண்டராஜன் தனக்கு உடன்பிறவா சகோதரன் அல்ல என்பதும், தன் உடன்பிறவா சகோதரி சசிகலாவுக்கே உடன்பிறவா சகோதரன் என்பதும் விளங்கிற்று
கூடன் குளம் போராட்டம் முதல் தென்னக பல போராட்டங்களில் அண்ணாச்சியின் ரகசிய தொடர்புகள் இருப்பதும் ஆங்காங்கு செய்திகளாயின‌.
அனுமதிகபட்ட தாதுக்களை தாண்டி தோரியம் போன்ற அணுசக்தி மூலபொருளும் அவர் நிறுவணத்தால் ஏற்றுமதியாவதாக சில சமிக்கைகள் தகவல்களாக வந்தன‌.
தேச பாதுகாப்பின் மிகபெரிய இடத்தால் அண்ணாச்சி சந்தேகிகபட்ட நேரம் காங்கிரஸ் ஆட்சி முடிந்து பாஜக ஆட்சி வந்தது, மோடி வந்தபின் பல மாறுதல்கள் நடந்தன‌.
அதுவரை டெல்லியின் காங்கிரஸ் தமிழக திமுகவின் கட்டுபாட்டில் இருந்தது திமுக யார் யாரோ பலரின் கட்டுபாட்டில் இருந்தது, தமிழ்நாடு தேசவிரோத கும்பல்கள் இன்னும் பல கும்பல்கள் நடமாடும் இடமாகவும் இருந்தது.
மோடி வந்து செய்யவேண்டியதை செய்ய ஆரம்பிக்க ஆரம்பிக்க ஒவ்வொன்றாய் மாறிற்று
ஜெயா இந்த இடத்தில் அடித்து ஆட ஆரம்பித்தார், ககன் தீப் சிங் பேடியினை இறக்கிவிட்டு சோதனை என அதிரடி காட்டி வைகுண்டராஜனின் சாம்ராஜ்யத்தின் சுவரினை இடிக்க ஆரம்பித்தார்.
வைகுண்டராஜனின் அதிரடி வேறுவிதமாய் இருந்தது, சசிகலா புஷ்பாவினை டெல்லியில் அலறவைத்து ஜெயாவுக்கே அதிர்ச்சி கொடுத்தார்.
இத்தோடு ஜெயா அப்பல்லோவுக்கு செல்ல காட்சிகள் மாறின.‌
அடுத்த முதல்வர் சசிகலா என நம்பியிருந்த வைகுண்டராஜனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது, சசிகலா கும்பல் வெளியே எறியபட்டதில் அண்ணாச்சியின் நம்பிக்கை தகர்ந்தது.
மோடி இரண்டாம் முறை வரவே கூடாது வரவும் மாட்டார் என மனமார நம்பியிருந்த அண்ணாச்சியின் கனவில் மண் விழுந்ததில் அவருக்கு கூடுதல் அதிர்ச்சி.
இப்பொழுது அண்ணாச்சி வழக்கில் தண்டனையும் பெற போகின்றார்.
உண்மையில் அண்ணாச்சி அசாத்திய ஆசாமி, வெறும்  கிராமத்து அரிசி வியாபாரியாக வாழ்வினை தொடங்கிய அவர் உலகளாவிய அளவில் ஆயுத விற்பனைக்கு நிகரான தாதுமணல் தொழிலில் கரைகண்டதெல்லாம் பாராட்ட வேண்டிய விஷயம்
ஆனால் அன்னார் எதில் சறுக்கினார் என்றால் தமிழக அரசியல் கட்சிகள் அதன் உப கட்சிகளிடம் வசமாக சிக்கினார், கட்சி அரசியல் அதிகாரிகள் என அவர் கப்பம் கட்டவேண்டிய தொகை எகிறிற்று
அது எகிற எகிற அவர் அள்ளவேண்டிய மண்ணின் அளவும் எகிறிற்று, அதை காட்டி காட்டி அரசியல் கட்சிகளின் நெருக்கடியும் எகிறிற்று
அண்ணாச்சி செய்த மிகபெரிய தவறு மாநில அரசியலில் சிக்கியது, இந்த திராவிட கும்பல்கள் சசிகலாவின் தரப்பு, நடராஜனின் திராவிட சிந்தனை அதனையொட்டிய தமிழ்தேசிய கோஷ்டிகள் என அவர் சிக்கியது மிகபெரிய சோகம்
அவர்மட்டும் தேசியவாதியாக நின்றிருந்தால் தமிழக கட்சிகளிடம் சிக்காமல் தேசிய அளவில் பரிணமித்திருந்தால் இந்நேரம் அதானி அம்பானி அளவுக்கு எழும்பியிருக்கலாம்
கூடா நட்பு எனும் சசிகலா குடும்பத்து பிடி அவரை சிக்க வைத்தது
இது தமிழ்நாட்டு தேர்தல் காலம், கடந்த இடைதேர்தலில் தினகரனுக்கு ஆதரவு ஒருமாதிரியான பாஜக எதிர்ப்பு என அண்ணாச்சி செய்த பல அரசியல் அவருக்கு எதிராயிற்று
பின் அவரின் டிவியின் மோடி பல்லவியினை பாஜகவும் கண்டுகொள்ளவில்லை
இந்நேரம் கருணாநிதி இருந்திருந்தால் ரகசியமாக ஆடுவார், திமுக தலமைக்கு அந்த வித்தை தெரியாது என்பதாலும் கனிமொழி தூத்துகுடியில் காலூன்றிவிட்டதாலும் அண்ணாச்சிக்கு பல விஷயம் விளங்கவில்லை
திறமையான வியாபாரியான அவர் அரசியலில் சிக்கி அது புரியாமல் வீழ்ந்துவிட்டார் என்பதுதான் நிஜம்
வைகுண்டராஜன் மேலான தீர்ப்பு தமிழகத்துக்கு சொல்ல வருவது என்னவென்றால் "ஏ தமிழக தொழிலதிபர்களே, நீங்களெல்லாம் எந்த கட்சியின் பினாமி என்பது டெல்லிக்கு தெரியும் இதனால் நீவீர் கவனமாக இருந்தால் உங்களுக்கு நல்லது" என்பதன்றி வேறல்ல‌
பழனிச்சாமி அதிமுக கூட்டணியின் தென்னக வெற்றிக்கு ஒரு சவாலாக இருப்பார் என கருதபட்ட அண்ணாச்சி பழைய வழக்கில் சிக்கபட்டு முடக்கபட்டிருக்கின்றார் என்பதன்றி விஷயம் வேறல்ல இதற்கு அவர் முன் செய்த இமாலய தவறுகளும் பெரும் காரணம்.
அண்ணாச்சியின் வீழ்ச்சியில் உண்மையில் மனம் கனக்கத்தான் செய்கின்றது
"நல்லதோர் வீணை செய்தே" என்பது போல் ஆச்சரியங்களை கொடுத்த அந்த எளிய மனிதன் திராவிட கட்சிகளின் சுயநலத்தால் பலிகொடுக்கபட்டுவிட்டான்
அகில இந்திய அளவில் டாடா போல கால காலத்துக்கும் நின்றிருக்க வேண்டிய சாம்ராஜ்யத்தை கட்டியிருக்க வேண்டிய தொழிலதிபர் தமிழக அரசியல் சூழ்ச்சியின் சுரண்டலால் வீழ்ந்துவிட்டான்
இதில் பல விஷயங்கள் சிந்திக்கபட வேண்டிய விஷயம் முதலாவது தாதுமணல் என்பது இனி அரசால் அதாவது மத்திய அரசால் எடுத்து நடத்தபடலாம் அல்லது மேட் இன் இந்தியா என இன்னும் சில தனியார் கம்பெனிகள் வரலாம்
அதன் நியாயமான வருமானம் திராவிட கட்சிக்கு செல்லாமல் அரசுக்கே செல்ல வழிசெய்யபடலாம், இன்னும் தென்னக கடற்கரையோரமெங்கும் ஏகபட்ட மாற்றங்கள் வரலாம்
திராவிடமும் அதன் கைகூலிகளும் இன்னும் பல தேசவிரோதிகளும் கைகோர்த்துதிரியும் அந்த சங்கில் அடித்து உடைக்கபடலாம்.
அண்ணாச்சியின் வீழ்ச்சி பல எதிரொலிகளை விரைவில் காட்டும்
திராவிட கட்சிகளால் மாறி மாறி வளர்க்கபட்ட , யாருக்கும் அடங்காமல் பல விஷயங்களில் தேசியத்துக்கு சவால் விட்ட ஒரு சுறாவினை மோடி அரசு அனாசயாமாக அடக்கிகொண்டிருக்கின்றது என்பதுதான் இன்னொரு கோணம்.
திருச்செந்தூரில் மாசிமகம் விழா விமரிசையாக நடக்கின்றது
திருச்செந்தூர் முருகனின் மிகபெரும் பக்தரான அண்ணாச்சி இப்பொழுது சிக்கலில் நிற்கின்றார்
ஆம், முருக பக்தரான சரவண பவன் ராஜகோபால் போலவே வைகுண்டராஜனுக்கும் தண்டனை கிடைக்கும் நேரமிது
தன் பக்தர்களுக்கு அள்ளி கொடுக்கும் முருகன் அவர்கள் செய்யும் தவறுக்கு தண்டனை கொடுக்கவும் தயங்குவதில்லை என்பதை சொல்லியபடி அடித்து கொண்டிருக்கின்றது திருசெந்தூரின் கடல் அலை
தேசியத்துக்கும் தெய்வீகத்துக்கும் எதிரான யாரையும் முருகன் விட்டுவைப்பதில்லை அதுவும் தன் பக்தர்கள் என்றால் தண்டிக்காமல் விடுவதே இல்லை என்பதுதான் ஆதித்தன் குழுமம் முதல் அண்ணாச்சி குழுமம் வரை பலர் மூலம் திருசெந்தூர் முருகன் உலகுக்கு சொல்லும் பெரும் பாடம்.தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo