மணல் கொள்ளை வி.வி.மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை ;டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் ;அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தனக்கு சாதகமாக உத்தரவுகளைப் பெற்றது என பல குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது.
டெல்லி 2021 பிப்ரவரி 22 ; மணல் மாஃபியா வைகுண்டராஜன் குற்றவாளி என டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வி.வி.மினரல்ஸ் நிர்வாக இயக்குனர் வைகுண்டராஜன் மீது சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் அவர் பல்வேறு சதி செயல்கள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தனக்கு சாதகமாக உத்தரவுகளைப் பெற்றது என பல குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ராதாபுரம், திருவெம்பாலபுரம் கடற்கரையில் மணல் அள்ளுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற வைகுண்டராஜன், மத்திய சுற்றுச்சூழல் துறை இணை இயக்குனர் நீரஜ்கட்டாரிக்கு ரூ.4 லட்சம் கொடுத்த வழக்கில் 2016 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், வி.வி.மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம் விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வி.வி.மினரல் நிறுவனத்துக்கு 10 லட்ச ரூபாய் அபராதமும் நீதிமன்றம் விதித்துள்ளது.வைகுண்டராஜனின் அலுவலக ஊழியர் சுப்புலட்சுமி என்பவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டணையும், 2 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அதிகாரி நீரஜ்கட்டாரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டணையும் 5 லட்ச ரூ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியருக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் தண்டனை வழங்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.