தண்ணீர் ராக்கெட் ஏவுதல் போட்டி ; பள்ளி மாணவ,மாணவிகள் பங்கேற்க்கலாம்
தூத்துக்குடி செப் 20 ;
உலக விண்வெளி வார விழா ஆண்டுதோறும் அக்டோபர் 4 முதல் 10ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் பல்வேறு விழிப்புணர்வு கருத்தரங்குகள், போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளிகளில் பயிலும் 300 மாணவர்-மாணவிகள் ஓவியப்போட்டியில் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இம் மாதம் 10ஆம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து திங்கள்கிழமை (அக். 5) விண்வெளி தொடர்பான படங்கள் திரையிடலும், விநாடி-வினா போட்டியும் நடைபெற உள்ளது. செவ்வாய்க்கிழமை (அக்.6) பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான, விண்வெளி நிகழ்வுகளைக் அட்டைகளில் காட்சிப்படுத்தும் போட்டியும், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் (அக்.7, 8) முறையே தனிநபர் மற்றும் குழுவாக தண்ணீர் ராக்கெட் ஏவுதல் போட்டியும் நடைபெற உள்ளது.
தொடர்பு கொள்க திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் ,கொக்கரகுளம் ,திருநெல்வேலி