எம்மதமும் எங்களுக்கு சம்மதம் ஓன்றே குலம் ஓருவனே தேவன். என்ற வழியில் பணியாற்றி வருகிறோம் ;அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
தூத்துக்குடி 2023 செப் 24 ; எம்மதமும் எங்களுக்கு சம்மதம் ஓன்றே குலம் ஓருவனே தேவன். என்ற வழியில் பணியாற்றி வருகிறோம் ;அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி பயிற்சி பட்டறை கலைஞர் அரங்கில் மாவட்ட அமைப்பாளர் அபிராமிநாதன் தலைமையில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பேசுகையில் தமிழக முதலமைச்சரின் திட்டங்கள் செயல்பாடுகள் அனைவற்றையும் வெளியுலகத்திற்கு எடுத்து சொல்லும் தகவல் தொழில்நுட்பத்துறையின் மிகவும் மகத்தானது. ஓவ்வொரு நாளும் முதலமைச்சர் அறிவிக்கும் திட்டங்கள் அறிக்கைகள் அனைவற்றையும் நாம் வரப்பெற்றதை இணையதளம் வாட்சப் முகநூல் போன்றவைகள் மூலம் தெரியப்படுத்த வேண்டும். வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சிகளில் இது மிகவும் முக்கியம் வாய்ந்த வலிமையான அமைப்பாகும். பாஜகவினர் பல்வேறு பழைய தகவல்களையும் நடைபெறாத சம்பவங்களையும் பதிவு செய்து தளபதியாருக்கும் நமது திட்டங்களுக்கும் கட்சிக்கும் எதிராக பதிவு செய்து வருகின்றனர். அதற்கு உடனடியாக நாமும் பதிலடி கொடுக்கும் வகையில் நமது சாதனைகளை பதிவு செய்ய வேண்டும். எந்த மதத்தையும் குறைத்து மதிப்பிடும் கட்சி திமுக கிடையாது. எல்லா மதத்தையும் மதிக்கிறோம் மதவெறியை எதிர்க்கிறோம். இதில் சிலர் தவறான கருத்துகளை கூறி குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எம்மதமும் எங்களுக்கு சம்மதம் ஓன்றே குலம் ஓருவனே தேவன். என்ற வழியில் பணியாற்றி வருகிறோம். முதலமைச்சரின் சிறப்பான திட்டத்தில் ஓன்றான கலைஞர் உரிமைத்தொகை வழங்கிய திட்டத்தை தகவல் தொழில்நுட்ப அணியினர் உலக அளவில் எடுத்துச்சென்றதற்கு மனதார வாழ்த்துகிறேன் என்று பேசினார்.
மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ பேசுகையில் ஓவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் குறைந்தபட்சம் 50 ஆயிரம் பேரிடம் சென்ற சேரும் வகையில் தளபதியின் திட்டங்களை செயல்பாடுகளை திமுகவின் வரலாறுகளை கொண்டு சேர்க்க வேண்டும். அப்படி சேர்க்கும் பட்சத்தில் 75 ஆயிரம் வாக்குகளை நாம் பெற்றால் எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெற்று விடலாம். அதற்கு உங்களுடைய பங்கு அவசியம் ஏற்கனவே சிறப்பாக பணியாற்றிய மாவட்டமாக அதை வழி நடத்தி செல்லும் அமைச்சர் கீதாஜீவனை தளபதியார் பெருமைப்படுத்தியுள்ளார். தொடர்ந்து வடக்கு மாவட்ட திமுக நம்பர் ஓன்னாக எல்லா செயல்பாடுகளிலும் இருக்கிறது. என்ற பெருமையை தேடி தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மாவட்ட அளவிலும் சட்டமன்ற தொகுதி அளவிலும் தகவல் தொழில்நுட்ப துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நினைவு பரிசும் ஊக்கத் தொகையும் அமைச்சர் கீதாஜீவன் வழங்கி கௌரவித்தார்.
கூட்டத்தில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர் பிரமிளா, மாவட்;ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், பிரபு, நாகராஜன், அருணாதேவி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வக்கீல் பாலகுருசாமி, பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மாகராட்சி மண்டலத்தலைவர் கலைச்செல்வி, கவுன்சிலர்கள் வைதேகி, ஜெயசீலி, சரண்யா, சுப்புலட்சுமி, விஜயகுமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாநகர அணி அமைப்பாளர் ஜெயக்கனி, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அண்ணாதுரை, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், தகவல் தொழில்நுட்ப அணி பகுதி அமைப்பாளர்கள் மார்க்கிஸ்ட்ராபட், சுரேஷ்குமார், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, சிறப்பு அழைப்பாளராக தலைமைக்கழக உத்தரவிற்கிணங்க தகவல் தொழில்நுட்ப அணி தலைமை அலுவலர்கள் செல்வி கீர்த்தனா, மருது, மற்றும் நாகர்கோவில் ஸ்டாலின், பாண்டிச்சேரி பிரகாஷ், கவிஞர் ஜேக்கப் பாலசிங், ஓய்வு பெற்ற அரசு அலுவலர் பரம்ஸ், நெல்லை ஜேசன், தூத்துக்குடி சிவில் பொறியாளர் பாலமுருகன், நிர்வாகிகள் ரேவதி, பெல்லா, கருணா, மணி, உலகநாதன், அல்பட், உள்பட 3 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக திமுக அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துச்சொல்லும் விதம் குறித்தும் எதிர்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அனைவருக்கும் பயிற்சி பட்டறை மூலம் விளக்கப்பட்டது.