எம்மதமும் சம்மதம் மதஉணர்வை மதிக்கிறோம். மதவெறியை எதிர்க்கிறோம் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
எம்மதமும் சம்மதம் மதஉணர்வை மதிக்கிறோம். மதவெறியை எதிர்க்கிறோம் தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி மாணவரணியினருக்கான திராவிட மாடல் பயிற்சி அரங்கம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். மேயர் ஜெகன் பெரியசாமி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி வரவேற்புரையாற்றினார்.
அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் திமுக திராவிடமாடல் ஆட்;சி என்பது அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது தான் 1949ல் தொடங்கிய திமுக ஜாதி மத வேறுபாடு இன்றி உழைக்கும் கட்சி 1921ல் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. நீதிகட்சி தொடங்கிய பின்பு 1929ல் தந்தை பெரியார் பெண்களுக்கு கல்வி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிகளை செய்ய வேண்டும். அடிமையாக இருக்க கூடாது. சொத்து சமஉரிமை வழங்க வேண்டும் என்று கூறினார். அதை சட்டமாக்கி பெண்களுக்கு வழங்கியவர் கலைஞர் ஏழை எளிய ஓதுக்கப்பட்ட மக்களுக்காக திட்டங்களை தீட்டி தமிழக மக்களுக்கு பணியாற்றியவர் கலைஞர் எங்களுக்கு எம்மதமும் சம்மதம் மதஉணர்வை மதிக்கிறோம். மதவெறியை எதிர்க்கிறோம். இந்த மொழியை அழிக்க வேண்டும் என்றால் இனத்தை அழிப்பதற்கு சமம் அதை மீட்டெடுக்கும் வகையில் தமிழ் மொழி செம்மொழி அந்தஸ்தை ஏற்படுத்தியவர் கலைஞர் இந்த ஆட்சியில் நரிக்குறவர்களுக்கு வீட்டுமனை பட்டா வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை கொண்டுவந்தவர் கலைஞர் கோவில் கோபுரத்தை பார்த்து கும்பிட்டு சென்றவர்களை உள்ளே செல்ல முடியாத நிலை இருந்ததை மாற்றியது திமுக தான். இதுபோல் பல சாதனைகளை முன்நிறுத்தி மக்களுக்காக உழைத்தது திமுக தான் நம்முடைய முதலமைச்சர் 24 மணிநேரத்தில் 20 மணி நேரமும் நாட்டுமக்களுக்காக உழைக்கிறார் என்றார். திமுக மாநில செய்தி தொடர்பு இணைசசெயலாளர் ராஜுவ்காந்தி, மாநில திட்டத் துணைத்தலைவர் ஜெயரஞ்சன் ஆகியோர் மாணவ மாணவிகளிடையே பேசுகையில் சுதந்திர தினம் குடியரசு தினம் சமூக நீதி மண்டல் கமிஷன் காவிரி நீர் பங்கீடு குறித்து டிவிசன் உருவாக்கிய பிரதமர் யார் திமுக தோண்றிய காலம் உள்ளிட்ட பல்வேறு கடந்த கால கருத்துகளை இந்த கால மாணவ மாணவிகளுக்கு தெரியும் வகையில் அதன் கருத்துகளை அவர்கள் மத்தியில் பேசி அதற்கான கேள்வி பதில்களுக்கு சரியான விடை தெரிவிக்க வேண்டும் என்று பேசினார்கள் பின்னர் அவர்கள் பேசிய கேள்விகளுக்கு விடை கேட்கப்பட்டது. அதற்கு சரியான பதிலளித்த மாணவ மாணவிகளுக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் 100 பேருக்கு அமைச்சர் கீதாஜீவன் ஜெயரஞ்சன் ராஜுவ்காந்தி மேயர் ஜெகன் பெரியசாமி கைகடிகாரம் வழங்கினார்கள்.
கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர்கள் ஆறுமுகம் ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, துணை மேயர் ஜெனிட்டா, மாநகரட்சி மண்டலத்தலைவர்கள் அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் கஸ்தூரிதங்கம், அன்பழகன், ரமேஷ், துணை அமைப்பாளர்கள் வக்கீல்கள் பாலகுருசாமி, சீனிவாசன், சங்கர், முத்துதுரை, நலம் ராஜேந்திரன், சின்னத்துரை, மாநகர அணி அமைப்பாளர்கள் ஜெயக்கனி, அருண்குமார், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், நிர்மல்ராஜ், ராமகிருஷ்ணன், ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் கதிரேசன், சக்திவேல், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் சின்னத்துரை உலகநாதன், பால்மாரி, கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், இசக்கிராஜா, ஜான்சிராணி, வைதேகி, ஜெயசீலி, வட்டச்செயலாளர்கள் சுப்பையா, நாராயணன், டென்சிங், சதீஷ்குமார், முக்கையா, மற்றும் ரவீ, அல்பட், கருணா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.