Onetamil News Logo

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு உட்பட்ட  விக்டோரியா CBSE பள்ளியில் நடப்பது என்ன? பெற்றோர் குமுறல் DSF நிர்வாகம்?

Onetamil News
 

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு உட்பட்ட  விக்டோரியா CBSE பள்ளியில் நடப்பது என்ன? பெற்றோர் குமுறல் DSF நிர்வாகம்?


தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு உட்பட்ட  விக்டோரியா CBSE பள்ளி நிர்வாகம் தற்சமயம் பழைய நிர்வாகிகளிடம் இருந்து கை மாறி  உள்ளது .                                                                                                                     
            புதிய DSF அணியினர் தற்சமயம் நிர்வாகம் செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் இந்தப் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள், வாட்ச்மேன்,  மற்றும் அலுவலக உதவியாளர்கள் உட்பட யாருக்கும் கடந்த 2  மாதம் சம்பளம் வழங்கவில்லை. புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளில் தலைவராக தமிழ்ச்செல்வன் ஐயர், தாளாளராக இன்ஸ்டின், ஆகியோர் பள்ளியில் புதிதாக பொறுப்பேற்றுள்ளார்கள். இந்தப் பள்ளி  கடந்த நிர்வாகிகளின் காலத்தில் தொடங்கப்பட்டது. தொடங்கி 4 வருடங்கள் கடந்துள்ளது.இதனால் அங்கு பணி புரியும் தலைமையாசிரியர், ஆசிரியர்,அலுவலக பணியாளர்கள் இவர்கள் அனைவரையும் பழைய நிர்வாகிகள் அப்பாயின்மென்ட் செய்துள்ளார்கள். ஆகவே இவர்களை  பழிவாங்கும் நோக்கத்தோடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி அவர்களுக்கு கடந்த 2 மாதச் சம்பளமும் வழங்காமல் பழிவாங்கி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. 
                           இதுகுறித்து அங்கு படிக்கும் மாணவனின் தந்தை பிராங்க்ளின் கூறியதாவது.. இந்தப் பள்ளியில்  படிக்கும் 800க்கும் மேற்பட்ட மாணவர்களுடைய படிப்பு கேள்விக்குறியாக்கப்படுகிறது. இப்போது இவர்கள் பொறுப்பேற்ற பின்பு பள்ளியில் நடக்க இருந்த ஸ்போர்ட்ஸ் டே  நிறுத்தி விட்டார்கள். இதற்கு ஒரு மாத காலமாக மாணவர்கள் பயிற்சி மேற்கொண்டு வந்தார்கள். புதிதாக வந்த நிர்வாகிகள் ஸ்போர்ட்ஸ் டே நடத்தக்கூடாது என்று கூறிவிட்டார்கள். இதனால் மாணவர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்கள். பள்ளியில் போதுமான அளவுக்கு அதிகமான வருமானமும் வருகிறது. ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு தேவைக்கு அதிகமாகவே பணம் உள்ளது. ஆனால் இவர்கள் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களை வேலையில் இருந்து நிறுத்த வேண்டும், தலைமை ஆசிரியரை மாற்ற வேண்டும், அவர்களுக்கு வேண்டிய  நபர்களை தலைமை ஆசிரியராக ஆக்க வேண்டும், என்றும் பள்ளியின் நிர்வாகத்தை சீர்குலைத்து எப்படியெல்லாம் தவறான முறையில் பணம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்தோடு தலைவர் அவர்களும் கரஸ்பாண்டர் அவர்களும் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் செய்யும் இந்த செயலால் மூன்று ஆசிரியர்கள் பணியில் இருந்து நின்று விட்டார்கள், இந்த நிகழ்வுகளை நாசரேத் திருமண்டல  நிர்வாகத்திற்கு தலைமையானவர். லே செயலாளர், அவர்களிடமும் இந்த பள்ளியில் நடக்கும் பிரச்சினைகளை எடுத்துக் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை பள்ளியில் படிக்கும் மாணவர்களுடைய பெற்றோர்களாகிய எங்களுக்கும் தெரியவந்துள்ளது. மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியில் இருந்து பிள்ளைகளை மாற்றி விடலாம் என்ற எண்ணத்திற்கு வந்து விட்டார்கள்.முதல் வருடம் 100 மாணவர்கள் இருந்த பள்ளியில் மூன்றே வருடத்தில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட்டு  சிறப்பாக இயங்கிய பள்ளியை இரண்டே மாதத்தில் மூடுவதற்கான வேலைகளை DSF நிர்வாகம் சிறப்பாக செய்து கொண்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். 
               இதுகுறித்து தாளாளர் இன்ஸ்டின்,அவர்களிடம் கேட்ட பொழுது அவர் கூறியதாவது நான் பொறுப்பேற்று இரண்டு நாட்கள் தான் கடந்துள்ளது. சம்பளம் போடப்படவில்லை என்பது நிர்வாக குழு முடிவு எடுக்கக் கூடியது நான் அவர்களிடம் எடுத்துரைக்கிறேன். அதைப்போல ஆசிரியர்கள் பள்ளியை விட்டு வெளியே செல்கிறார்கள், என்பது அவருடைய உடல் சார்ந்த விஷயங்களுக்காக அவர்கள் பள்ளியிலிருந்து வெளியே செல்கிறார்கள், மேலும் இதுகுறித்து நான் நிர்வாகக் குழுவிடம் தெரிவிக்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo