Onetamil News Logo

தூத்துக்குடி ஊரக பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வுக்கு 30பேர் கொண்ட வாட்ஸாப் குழு ; ஊரக துணை காவல் கண்காணிப்பாளர் கலைகதிரவன் தகவல்

Onetamil News
 

தூத்துக்குடி ஊரக பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வுக்கு 30பேர் கொண்ட வாட்ஸாப் குழு ; ஊரக துணை காவல் கண்காணிப்பாளர் கலைகதிரவன் தகவல்


தூத்துக்குடி 2020 மார்ச் 27 ;தூத்துக்குடி ஊரக பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வுக்கு 30பேர் கொண்ட வாட்ஸாப் குழு ; ஊரக துணை காவல் கண்காணிப்பாளர் கலைகதிரவன் தகவல் தெரிவித்துள்ளார்.
 சீனாவை மட்டுமின்றி உலகின் அனைத்து நாடுகளையும் அச்சமடைய வைத்துள்ள கொரோனா வைரஸ் பரவல் குறித்து எண்ணற்ற செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. உலகையே தற்போது கொரோனா வைரஸ் முடக்கியுள்ளது.   
 கோவிட்-19 வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்கும் விதமாக, ஊரின் நுழைவு வாயிலில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகை, தண்ணீர் குழாய் அமைத்து, கைகளைக் கழுவுவதற்காக சோப்பும் வைத்துள்ளனர். இந்தியாவில் 21நாட்கள்  ஊரடங்கு உத்தரவு எதிரொலியால் தூத்துக்குடியை சுற்றியுள்ள ஊரகப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் காவல் ஆய்வாளர் தலைமையில் இளைஞர்கள்,தூய்மைப் பணியாளர்கள்,சுகாதாரப் பணியாளர்கள்,வருவாய் அதிகாரிகள்,போலீசார் கொண்ட 30பேர்  குழுவாக சேர்ந்து தங்களுக்குள்ளே கட்டுப்பாடுகளை விதித்து செயல்பட ஊரக துணை காவல் கண்காணிப்பாளர் கலைகதிரவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது....இந்த நிலையில் கிராமத்திற்கு செல்லும் பாதைகள் எல்லைகளை தடுப்புகள் வைத்து மூடியுள்ளனர். அந்த இடத்தில் கை கழுவுவதற்காக சோப்பு மற்றும் டெட்டால் கிருமி நாசினி திரவம் ஆகியவற்றை வைத்துள்ளார்.ஊரில் இருந்து வெளியே செல்பவர்களை விசாரித்து அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியே செல்லுமாறு அறிவுறுத்தி அனுமதிக்கின்றனர். அன்னிய நபர்கள் யாரேனும் ஊருக்குள் வருவதாக இருந்தால் விசாரிக்கின்றனர். முக்கியமான பிரச்சினையாக இருந்தால், அவர்களுக்கு சோப்பு, தண்ணீர் கொடுத்து கைகளை கழுவ வைத்து உள்ளே அனுமதிக்கின்றனர்.மேலும் தங்கள் ஊரில் இருந்து வெளியே சென்று அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வருவோரையும் கைகளை சோப்பு போட்டு கழுவிய பிறகே ஊருக்குள் அனுமதிக்கின்றனர்: கிராமத்துக்கு வெளியூரில் இருந்து வருபவர்களும், இங்கிருந்து வெளியூர் செல்பவர்களும் கண்டிப்பாக சோப்பு போட்டு கைகளையும், கால்களையும் கழுவ வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். இந்த நடவடிக்கைக்கு, கிராம மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று அவர் கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo