காஞ்சிபுரம் புஷ்பா விவகாரத்தில் போலீசார் திணறி வந்த நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளி கைது
காஞ்சிபுரம் புஷ்பா விவகாரத்தில் போலீசார் திணறி வந்த நிலையில், இப்போது சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்துள்ளனர்..
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தென்புஷ்கரணி பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன்.. இவர் ஒரு கூலி தொழிலாளி.. மனைவி பெயர் புஷ்பா.. 34 வயதாகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல் வேலை முடிந்து, வீட்டுக்கு வந்துள்ளார் வெங்கடேசன்.. அப்போது வீட்டிற்குள் நுழைந்தால், புஷ்பா தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார்.. இதைப்பார்த்து அதிர்ந்துபோன வெங்கடேசன் உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் தந்தார்..
க்ளு எதுவும் கிடைக்கவில்லை: அதன்பேரில், போலீசாரும், விரைந்து வந்து, புஷ்பாவின் சடலத்தை மீட்டனர்.. அப்போதுதான், புஷ்பாவின் உடம்பெல்லாம் காயங்கள் கிடந்ததை கண்டனர்.. எனவே, அவரை யாராவது அடித்து கொன்று, தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.. இதையடுத்து, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்ததுடன் விசாரணையையும் துவங்கினர்..
அதன்படி, அக்கம்பக்கத்தினரிடமும், வெங்கடேசனிடம் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.. ஆனால், கொலை தொடர்பாக எந்த க்ளூவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.. அதற்குபிறகுதான், புஷ்பாவின் செல்போனை ஆராய்ந்தனர்.. அந்த செல்போன்தான், கொலையாளியையும் காட்டித்தந்தது..
ஆண் நண்பர்கள்: புஷ்பாவிற்கு நிறைய ஆண் நண்பர்கள் இருந்து வந்ததாக தெரிகிறது.. அதேபோல, வெங்கடேசனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. வெங்கடேசன் வேலைக்கு போய்விட்டால், உடனே புஷ்பா தன்னுடைய ஆண் நண்பர்களுக்கு போனை போட்டு வரவழைத்து விடுவாராம்.. அப்படித்தான், யோபு என்பவர் புஷ்பாவின் ஆண் நண்பராக இருந்திருக்கிறார்.. திருவள்ளூர் மாவட்டம் ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் இந்த யோபு.. 28 வயதாகிறது.. புஷ்பாவிற்கும் யோபுவிற்கும் திருமணம் தாண்டிய உறவு தொடர்ந்து இருந்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
யோபுவிற்கு அவரது வீட்டில் கல்யாண ஏற்பாடு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.. இதனால், புஷ்பாவிடமிருந்து விலகி இருந்ததாக தெரிகிறது.. சம்பவத்தன்று புஷ்பாவை வழக்கம்போல் அவரது வீட்டில் சந்தித்து பேசியுள்ளார்.. வழக்கம்போல், ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.. அப்போது, "நீ என்னைவிட்டு வேற யாரையுமே கல்யாணம் செய்யக்கூடாது" என்று புஷ்பா குடிபோதையில் சொல்லி கொண்டே இருந்தாராம்.. இதனால், ஆத்திரம் அடைந்த யோபு, புஷ்பாவை கடுமையாக தாக்கியுள்ளார்..
தானாகவே சரண்: இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து புஷ்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.. இதை பார்த்து பதறிப்போன யோபு, இறந்த புஷ்பாவை தூக்கில் மாட்டிவிட்டு தப்பி சென்றிருக்கிறார்.. இவ்வளவும் விசாரணையில் உறுதியானதையடுத்து, யோபு கைதாகி உள்ளார்.. போலீசார் தன்னை தேடுவதாக அறிந்த யோகி, திருவள்ளூர் மணவாளநகர் போலீசில் தானாகவே சரணடைந்தார். எனினும், இந்த கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் யோபுவை ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.