Onetamil News Logo

2021 -தேர்தலில் போட்டியிட அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்?  இன்று காலை அறிவிப்பு ;அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்க உள்ளார் 

Onetamil News
 

2021 -தேர்தலில் போட்டியிட அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்?  இன்று காலை அறிவிப்பு ;அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்க உள்ளார் 


சென்னை 2020 அக்டோபர் 7 ;சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார்...? என்ற நீண்ட நாள் கேள்விக்கு இன்று விடை கிடைக்கும் வகையில், அக்கட்சி அதிமுக முதல்வர்  வேட்பாளர் குறித்தும், 11 நபர்கள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு குறித்தும் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து இன்று காலை 9.45 மணிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்க உள்ளார் எனத் தகவல் வெளியிட உள்ளது. 
ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதற்கான நேரம் அறிவிக்கப்படாத நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தின் நுழைவுவாயிலில் வாழை மரங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், வரவேற்பு வளைவுகள் வைக்கப்பட்டுள்ளன. அலுவலகத்தில் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தலைமைக் கழகத்துக்கு வருபவர்களை வரவேற்க ஓபிஎஸ், இபிஎஸ் பெயரில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. காவல் துறையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொண்டர்கள் அதிக அளவில் வர வாய்ப்பு உள்ளதால், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகளை, தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் தி.நகர் சத்யா செய்துள்ளார்.
நள்ளிரவு முழுவதும் நீடித்த பேச்சுவார்த்தை, அதிகாலை 3.15 மணிக்கு ஓ.பி.எஸ் வீட்டில் நிறைவடைந்தது.
பின்னர் ஓ.பி.எஸ் வீட்டில் இருந்து கிளம்பிய கே.பி முனுசாமி, வைத்தியலிங்கம், தங்கமணி, வேலுமணி,ஜெயக்குமார், ஆர்.பி உதயகுமார், சி.வி சண்முகம், நத்தம் விஸ்வநாதன், உள்ளிட்ட அனைவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்திற்கு சென்று, ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்திடம் நடத்திய பேச்சுவார்த்தை எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து அதிகாலை 3.45 மணி வரை ஆலோசனை நடத்தினர். அப்போது, வழிகாட்டுதல் குழு தொடர்பாக தீவிரமாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
காலை 10 மணிக்கு நல்ல செய்தி வரும். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வருவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் நடைபெற்று வருகின்றன’ என்று துணை முதல்வர் ஓ.பி.எஸ்.இல்லத்தில் இருந்து வெளியே வரும் போது துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.அதிமுக முதல்வர் வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், சென்னை ராயபுரத்தில் உள்ள அக்கட்சி தலைமையகம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், பட்டாசு மற்றும் இனிப்புகளுடன் தொண்டர்கள் காத்திருக்கின்றனர்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo