Onetamil News Logo

சில்லாங்குளத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி வந்து சென்ற 10 வது நாளில் மாணவி தற்கொலை ஏன்? முறையான கவுன்சிலிங் மாணவ மாணவியருக்கு வழங்காதது ஏன்? பல்வேறு குற்றசாட்டுகளை எடுத்துக்கூறியும் அமைச்சர் கண்டுகொள்ளாதது ஏன்? 

Onetamil News
 

சில்லாங்குளத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி வந்து சென்ற 10 வது நாளில் மாணவி தற்கொலை ஏன்? முறையான கவுன்சிலிங் மாணவ மாணவியருக்கு வழங்காதது ஏன்? பல்வேறு குற்றசாட்டுகளை எடுத்துக்கூறியும் அமைச்சர் கண்டுகொள்ளாதது ஏன்? 


 தூத்துக்குடி. செப். 21 ;சில்லாங்குளத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி வந்து சென்ற 10 வது நாளில் மாணவி தற்கொலை ஏன்? முறையான கவுன்சிலிங் மாணவ மாணவியருக்கு வழங்காதது ஏன்? பல்வேறு குற்றசாட்டுகளை எடுத்துக்கூறியும் அமைச்சர் கண்டுகொள்ளாதது ஏன்? என்கின்ற பல்வேறு கேள்விகள் அனைவரையும் சுற்றிவருகிறது. தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பரிமளா காசுக்காக பல தில்லாலங்கடி வேலைகளை செய்துள்ளனர்.இரவு நேர வாட்ச்மேன் ஸ்டீபன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு ப்ரோக்கர் வேலையை செய்துவந்துள்ளார் என்று ஓட்டப்பிடாரம் சமூக ஆர்வலர் முருகேசன் செய்தியாளர்களிடம் கூறினார்.                                                                                                                  
          தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சில்லாங்குளம் முத்து கருப்பன் நினைவு மேல்நிலைப்பள்ளியில்  முத்துகருப்பன்  நினைவு மாணவர் விடுதியினை  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.கண்ணபிரான், முன்னிலையில் இன்று திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி விடுதியினை பார்வையிட்டார்கள்.
     நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், தெரிவித்ததாவது:
    தூத்துக்குடி மாவட்டம் கல்வியில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. முத்துக்கருப்பன் நினைவு அறக்கட்டளை நிறுவனர் அவர்கள் 1930ம் ஆண்டில் 30 மாணவ, மாணவிகளுடன் ஒரு திண்ணைப்பள்ளிக்கூடமாக ஆரம்பித்துள்ளார்கள். இன்றைக்கு கிட்டத்தட்ட 4000 மாணவ, மாணவிகள் படிக்கக்கூடிய அளவிற்கு வளர்ந்துள்ளது. படிப்படியாக 2013ல் மேல்நிலைப்பள்ளியாகவும் வளர்ந்துள்ளது. இந்த நிறுவனம் இங்கு பயிலும் மாணவர்களுக்கு தங்குமிடம், உணவு, கல்வி என எல்லாவற்றையும் வழங்கி சேவை மனப்பான்மையோடு நடத்தி வருகிறது. ஆசிரிய பெருமக்களால்தான் மாணவர்களுக்கு கல்வி வழங்கி நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும். இங்குள்ள ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகிறார்கள். 
தமிழக முதலமைச்சர் அவர்கள்  ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் கொரோனா காலம் முடிந்த பின்பு முக்கியமாக பள்ளிக்கல்வித்துறை, சுகாதாரத்துறை ஆகிய 2 துறைகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். கல்வியில் வளர்ச்சி அடைந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய முடியும். தமிழக முதலமைச்சர், கொரோனா காலத்தில் ஏற்பட்ட மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக வீடுகளுக்கே சென்று கற்பிக்கும் இல்லம் தேடி கல்வித்திட்டம்,  மாணவர்களின் தனித்திறன்களை கண்டறிந்து அதனை ஊக்குவித்து வளர்ப்பதற்காக நான் முதல்வன் திட்டம், எண்ணும், எழுத்தும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மாணவ, மாணவிகள்தான் எதிர்காலத்தின் தூண்கள். சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர வேண்டுமென்றால் அது கல்வியால் மட்டும்தான் முடியும். அதனால்தான் மாண்புமிகு தமிழக முதலமைச்சர், கல்விக்கு முக்கியத்துவம் அளித்து ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். 
             தமிழகத்தில் அனைத்து மாணவிகளும் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதுதான் தமிழக முதலமைச்சர் அவர்களின் நோக்கம். அதற்காக அரசு பள்ளி மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்பதற்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்கள். வேலைக்கு செல்லும் மகளிர்; இலவசமாக அரசு பேருந்தில் பயணம் செய்யும் திட்டத்தினையும் செயல்படுத்தியுள்ளார்கள். இதனால் அவர்கள் பொருளாதார ரீதியாக பயனடைந்து வருகின்றனர். 
             மாணவர்கள் படிக்கும் காலத்தில் தங்களுடைய கவனம் முழுவதையும் படிப்பில் செலுத்த வேண்டும். கல்வியுடன் ஒழுக்கமும் மிகவும் முக்கியம். மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்கள், ஆசிரியர்களின் அறிவுரைகளை கேட்டு நடக்க வேண்டும். நீங்கள் படித்து நல்ல நிலைக்கு முன்னேறினால்தான் உங்கள் பெற்றோருக்கும், கற்றுத்தந்த ஆசிரியர்களுக்கும், படித்த பள்ளிக்கும் பெருமை. நன்றாக படித்து வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். தைரியமும், தன்னம்பிக்கையும் உள்ள மாணவ, மாணவிகளாக உருவாக வேண்டும். மாணவ, மாணவிகள் மதிப்பெண்கள் குறைந்தால் தற்கொலை செய்யும் முடிவினை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மதிப்பெண்கள் குறைந்தால் தொடர்ந்து முயற்சி செய்து தேர்ச்சி அடைந்துவிடலாம். எனவே தவறான முடிவுகளை எடுக்கக்கூடாது. 
             பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகள் எதிர்காலத்தில் என்ன தொழில் செய்ய போகிறோம் அல்லது என்ன வேலைக்கு செல்வதற்கு என்ன படிக்கலாம் என்பதை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்தாலோசித்து மேற்படிப்பு படிப்பதற்கு முடிவு செய்ய வேண்டும். நமது எண்ணங்கள் பெரியதாக இருந்தால்தான் வாழ்க்கை நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.
              அதனைதொடர்ந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள், சில்லாங்குளம் அரசு மாணவ- மாணவியர் விடுதியினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். பள்ளியில் வெளி மாவட்டத்தில் இருந்து தங்கிப் பயிலும் மாணவர்கள் கே.பொன் செல்வன், கே.சபரீஷ் ஆகிய இரு மாணவர்களின் பெற்றோர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ‘நீங்கள் உங்கள் மாணவர்கள் தங்கி பயிலும் பள்ளியில் உங்கள் மாணவர்களை அடிக்கடி பார்க்க வருவீர்களா?” என்றும் மாணவர்களிடம் பள்ளியின் தரம் குறித்தும் உணவு முறைகளையும் கேட்டறிந்தார்கள். அதன் பின்பு பள்ளி வளாகத்தில் உள்ள சமையலறையினை ஆய்வு செய்து மாணவர்களுக்கு உணவு வழங்கும் கூடங்கள் அனைத்தும் சுத்தமாக இருக்கிறதா என்றும்,  பள்ளி மாணவ மாணவியரின் தங்கும் விடுதிகளை ஆய்வு மேற்கொண்டும் அங்கு பயிலும் மாணவ மாணவியர்களின் வருகை பதிவேடுகளையும், மாணவர்கள் தங்கும் அறைகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
             பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் சுத்தமாகவும் சுகாதாரத்துடனும் பேணி காக்க வேண்டும் என்றும் தங்கும் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளின் உடல்நிலை சரியில்லை என்றால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர்களை அழைத்து செல்வதற்கு வாகன வசதிகள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அவர்களின் உணவு முறைகளில் முருங்கை இலை, வாழைக்காய் போன்ற சத்தான உணவு ஆதாரங்களை வழங்க வேண்டும். வாரத்தில் ஒரு நாள் அனைத்து மாணவர்களுக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும். குழந்தைகளின் உணவு தரமானதாக இருக்க வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
          அதனைத்தொடர்ந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், பசுவந்தனை ஆதிதிராவிடர் மாணவர் விடுதியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். 
நிகழ்ச்சியில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் கா.மகாலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பரிமளா, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் என். ரமேஷ், ஒன்றிய துணைத் தலைவர் காசி விஸ்வநாதன், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் நிஷாந்தினி, தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) செல்வகுமார், பள்ளி தலைமை ஆசிரியர்  கருப்பசாமி பாலமுருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அருண்குமார் (கொடியன்குளம்), சரோஜா கருப்பசாமி (சில்லாங்குளம்), இளையராஜா, (ஓட்டப்பிடாரம்) மற்றும்  அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
                ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ்  தலைமையில் சில்லாங்குளம் பள்ளியில் ஆய்வு ஓட்டப்பிடாரம் வ.உ.சி அரசு மேல்நிலைப் பள்ளியில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்காக தாட்கோ மூலம் தனித்தனியாக விடுதிகள் கட்டப்பட்டு வருகிறது.
வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தலா ரூபாய் 251.21 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாணவியர் விடுதி மேட்டூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வரும் ஆதி திராவிட நல மாணவர் விடுதியையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.மேலும், இந்த விடுதியில் சுமார் 100 மாணவர்கள் தங்கி படிக்கலாம் என கூறப்படுகிறது. ஆய்வின் போது கட்டிடங்கள் தரமாக கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், ”முதலமைச்சர் பொறுப்பேற்றத்திலிருந்து ஆதிதிராவிடர் நலத்துறைக்காக 100கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து திட்டங்கள் செயல்படுத்த பட்டு வருகின்றன.
          தமிழ்நாட்டில், 320 பழங்குடி நல பள்ளிகள் 1,138 ஆதிதிராவிடர் நல பள்ளிகள் உள்ளது. இது அனைத்தும் கடந்த ஆட்சியில் பராமரிக்கவில்லை. இதனை முதலமைச்சர் கவனத்தில் கொண்டு சீரமைக்கப்படும்” என்றார். ஆய்வின்போது, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி, ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், வட்டாட்சியர் நிஷாந்தினி, தனி வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் திமுக கட்சியினர் உடனிருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo