Onetamil News Logo

தூத்துக்குடி உள்ளூர் திட்டக்குழும அலுவலகத்தில் கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணம் பறிமுதல்,உதவி இயக்குனர் வேல்முருகன்,கண்காணிப்பாளர் தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?   

Onetamil News
 

தூத்துக்குடி உள்ளூர் திட்டக்குழும அலுவலகத்தில் கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணம் பறிமுதல்,உதவி இயக்குனர் வேல்முருகன்,கண்காணிப்பாளர் தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?   


 தூத்துக்குடி மில்லர்புரம் 2வது தெருவில் உள்ள மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகத்தில் பல்வேறு புகார்கள் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு கிடைத்ததை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பால் தலைமையில் எட்டு பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை குழுவினர் நேற்று மாலை 6 மணி அளவில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.அந்த அலுவலகத்தில் பத்து பேர் பணியில் இருந்தனர் அலுவலகத்தில் உதவி இயக்குனர் வேல்முருகன் கண்காணிப்பாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் அலுவலகத்தில் இருந்தனர்.
           லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனைகள் கண்காணிப்பாளர் தியாகராஜனிடமிருந்து கணக்கில் வராத 1 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, மேலும் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
             அலுவலகத்தில் பார்வையாளராக இருந்த 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர், இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அரசு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
              புதியதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வேண்டும் என்றால் இந்த அலுவலகத்தில் தான் அனுமதி பெற வேண்டும், அனுமதி அளிப்பதற்கு ஒவ்வொரு கட்டிட உரிமையாளரிடம் பல லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதி வழங்கி வருவதாகவும், வணிக வளாகம் கட்ட வேண்டும் என்றாலும் இந்த அலுவலகத்தில் தான் அனுமதி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.தூத்துக்குடி உள்ளூர் திட்ட குழுமத்தில் தினந்தோறும் பணம் மலை குவியும் என்பது அனைத்து அதிகாரிகளுக்கும் தெரியும் எவ்வளவுதான் நடவடிக்கை எடுத்தாலும் பணம் கொடுத்தால்தான் உள்ளூர் திட்ட குழும அனுமதி கிடைக்கும் என்கின்ற நியதியானது எழுதப்படாமல் இருக்கிறது பணம் கொடுக்கவில்லை என்று சொன்னால் அந்த பைல் கால தாமதம் செய்யப்படும் இவர்களுக்கு அரசு கை நிறைய சம்பளம் கொடுத்தாலும் இவர்களை திருத்துவதற்கு வழி தெரியாமல் அதிகாரிகளே முழிக்கிறார்கள் காரணம் அதிகாரிகளே சென்றாலும் அவர்களிடமும் பணம் பெற்றுக் கொண்டுதான் அனுமதி வழங்கப்படுவதாக பல்வேறு நபர்கள் தெரிவிக்கிறார்கள் இந்த அலுவலகத்திற்கு என்று பல புரோக்கர்கள் இருக்கிறார்கள் அவர்கள் என்ன சொல்கிறார்களோ? அதைத்தான் இந்த அலுவலக அதிகாரிகள் கேட்பதாகவும் தகவல்கள் கசிகிறது. எது? எப்படியோ? இறைவன் ஒருவன் இருக்கிறான் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மறுபடியும் தர்மமே வெல்லும் இதுதான் உண்மை.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo