மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் இம்மானுவேல் காண்ட்ராக்ட்காரர் ஜெபர்சன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
தூத்துக்குடி 2023 செப் 22 ;மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் இம்மானுவேல் காண்ட்ராக்ட்காரர் ஜெபர்சன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ 1000 கோடி செலவில் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் 400 கோடிக்கு மேல் முதலமைச்சர் நேரடி கவனத்தில் பல்வேறு சாலைகள்,கட்டிட வசதிகள் எல்லாம் கட்டப்பட்டு வருகின்றது. தூத்துக்குடியை மிகவும் வளர்ச்சி நிறைந்த நகரமாக மாற்றுவதற்கான முயற்சிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, செயலாற்றி வருகிறார். இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள அரசு ஒப்பந்த காரர்கள் தங்களது கடமைகளை சரிவர செய்வது கிடையாது. பில் பாஸானால் போதும் என்கின்ற சிந்தனைக்கு வந்து விட்டார்கள். இதுதான் மிகப்பெரிய ஒரு வருத்தம் ஆகும். தூத்துக்குடி பிரையண்ட் நகர் 12வது தெரு பகுதி சந்திப்பில் கட்டபொம்மன் நகர் உள்ளது. இந்த சந்திப்பில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருந்து இன்று வரை இரண்டு பைப் லைன் உடைந்து தண்ணீர் வெளியே சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இமானுவேல் காண்ட்ராக்ட் காரர் ஜெபர்சன் உடைந்த பைப் லைனை சரி செய்யப்படாமலேயே தார் சாலையை அமைத்து மக்களின் வரிப்பணத்தை வீணடித்திருக்கிறார். ஆகையால் இம்மானுவேல் காண்ட்ராக்ட் காரர்களுக்கு தூத்துக்குடி மாநகராட்சியில் இருந்து இனிமேல் எந்தவித காண்ட்ராக்ட் பணிகளும் வழங்கக்கூடாது. மீறினால் இதுகுறித்து வழக்கு பதிவு செய்வதற்கான விஷயங்களில் களமிறங்க இருக்கிறது தமிழன்டா இயக்கம். ஆகையால் மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதில் காண்ட்ராக்ட் காரர்கள் அலட்சியம் காட்டுகிறார்கள். மக்கள் மேல் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதில் குறிக்கோளாக இருக்கிறார்கள். ஆகையால் இம்மானுவேல் காண்ட்ராக்ட் காரர் ஜெபர்சன் என்பவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர் மீது அரசு பணத்தை வீணடிப்பு செய்தது குறித்து விசாரித்து ஒட்டுமொத்த பணத்தை மாநகராட்சி மீண்டும் கையகப்படுத்த வேண்டும்.அப்பொழுது தான் மற்ற ஒப்பந்ததாரர்களுக்கு பாடமாக அமையும்.