Onetamil News Logo

தூத்துக்குடி மாநகராட்சியில் தண்ணீர் பயன்பாடு இல்லாத சிறுநீர் கழிக்கும் இ.டாய்லெட் 100 இடங்களில்  அமைக்கப்படுமா ? ;தூத்துக்குடி 0.309 -மேலூர் கூட்டுறவு வீட்டுவசதித் சங்க தலைவர் தனராஜ் கோரிக்கை 

Onetamil News
 

தூத்துக்குடி மாநகராட்சியில் தண்ணீர் பயன்பாடு இல்லாத சிறுநீர் கழிக்கும் இ.டாய்லெட் 100 இடங்களில்  அமைக்கப்படுமா ? ;தூத்துக்குடி 0.309 -மேலூர் கூட்டுறவு வீட்டுவசதித் சங்க தலைவர் தனராஜ் கோரிக்கை 


தூத்துக்குடி 2020 செப் 28 ; தூத்துக்குடி மாநகரின் 100 இடங்களில் சிறுநீர் கழிப்பிடம் கட்டப்படுமா?: சுகாதார சீர்கேட்டை தவிர்க்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தூத்துக்குடி 0.309 -மேலூர் கூட்டுறவு வீட்டுவசதித் சங்க தலைவர் தனராஜ் கூறியதாவது... தூத்துக்குடி மாநகரில் சுகாதார சீர்கேட்டை தவிர்க்கும் வகையில், மக்கள் அதிகம் கூடும் 100 இடங்களில் சிறுநீர் கழிக்கும் இடங்கள் ஏற்படுத்தப்படவேண்டும். தூத்துக்குடி மாநகரின் முக்கிய பகுதிகளான பாளையங்கோட்டை சாலையில் கோர்ட்,ராஜாஜி பூங்கா,தெற்கு காவல் நிலையம், வங்கிகள், ஜவுளிக்கடைகள் ,டாஸ்மாக் கடை, உள்ளிட்ட பல பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதுபோல வி.இ.சாலை,முதல் கேட் ,2-ம் கேட் ,புதிய பேரூந்து நிலையம்,மார்க்கெட் பகுதிகள்,உட்பட பல பகுதிகள் உள்ளன. அவ்வாறு மாநகருக்கு வரும் லட்சக்கணக்கானோருக்கு சிறுநீர் கழிக்க போதிய வசதி இல்லை என்பதால், பொதுமக்கள் திறந்த வெளிகளிலும், பொது இடங்களின் மூலை முடுக்குகளிலும் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் மாநகரில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இப்பிரச்னையை தீர்க்க, இதுவரை மாநகராட்சி முயற்சி எதையும் எடுக்கவில்லை.
தற்போது  மாநகரில் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை களைந்து, தூத்துக்குடி மாநகரை, பாதுகாப்பான சுற்றுப்புற சூழல் நிறைந்த பசுமை மாநகராக மாற்றும் முயற்சியில் இறங்க வேண்டும்.. தூத்துக்குடி மாநகரில் சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பதை அடியோடு ஒழிக்கும் முயற்சியை அதிகாரிகள் மேற்கொள்வார்களா?. இதற்காக தூத்துக்குடி மாநகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், நடமாட்டம் மிகுந்த பகுதிகள் ஆகியவற்றில் நவீன சிறுநீர் கழிக்கும் இடங்கள் அமைக்க திட்டமிட்டு, மாநகராட்சி அதிகாரிகளின் உதவியோடு  தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா?
 தண்ணீர் பயன்பாடு இல்லாத சிறுநீர் கழிக்கும் நவீன வசதியை தொடங்கவேண்டும்.
தூத்துக்குடி மாநகரில் திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படுகிறது. இதை போக்கும் வகையில், மாநகரில் மக்கள் அதிகம் கூடும், நடமாட்டம் மிகுந்த 100 இடங்களில் நவீன சிறுநீர் கழிப்பிடங்கள் மாநகராட்சி மூலம் கட்ட வேண்டும். அதற்கான இடங்களை தேர்வு செய்யவேண்டும். தண்ணீர் பயன்பாடு இல்லாதது, இ.டாய்லெட் என பல்வேறு விதமான சிறுநீர் கழிப்பிடங்களை அமைக்கவேண்டும்.
 பொது கழிப்பிடங்கள் அசுத்தமாக இருப்பதால் தான் அவற்றை பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்கின்றனர். அதை தவிர்க்கும் வகையில், பொது கழிப்பிடங்கள் மற்றும் சிறுநீர் கழிப்பிடங்களை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும்.பொது கழிப்பிடங்கள் மற்றும் சிறுநீர் கழிப்பிடங்களின் சுவர்களில் வண்ண இயற்கை ஓவியங்கள் வரைந்து பராமரிக்க வேண்டும். இதன்மூலம் பொதுமக்கள் ஆர்வமாக, அந்த இடங்களை இயற்கை உபாதைக்கு பயன்படுத்த முன்வருவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo