Onetamil News Logo

கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வரவை முன்னிட்டு ரயில்வே கோட்டம் மாற்றும் கோரிக்கையை உறுதி அளிப்பாரா?

Onetamil News
 

கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வரவை முன்னிட்டு ரயில்வே கோட்டம் மாற்றும் கோரிக்கையை உறுதி அளிப்பாரா?


தற்போது பாராளுமன்ற இடைதேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய பிரதமர் மோடி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கன்னியாகுமரிக்கு வருகிறார். இவ்வாறு வரும் போது இந்த கோட்ட பிரச்சனை விவாதபொருளாக மாறி பிரதமரின் பேச்சில் இது பற்றிய பேசப்படலாம் அல்லது உறுதிமொழி அளிக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. தற்போது தேர்தல் நடைபெறுவதால் இது பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிட முடியாது. ஆனால் இது பற்றி ஒருசில வார்த்தைகள் பேசினால் இந்த கோரிக்கை தேர்தல் முடிந்த பிறகு செயல்படுத்த முடியும்.
திருவாங்கூர் - கொச்சி மாநிலத்திலிருந்து தமிழ்மொழி பேசும் தாலுகாகளைப் பிரித்து கன்னியாகுமரி மாவட்டம் என்ற பெயரில் புதிய மாவட்டத்தை நவம்பர்1-ம் தேதி 1956-ம் வருடம் உருவாக்கப்பட்டு தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது.  குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டாலும் இன்னும் சில காரியங்களில் குமரி மாவட்ட மக்கள் கேரளா ஆதிக்கத்திலிருந்து விடுபடவில்லை. அவைகளில் முக்கியமானது, குமரி மாவட்ட ரயில் சேவை நிர்வாகம் ஆகும். கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ள ரயில்வே வழித்தடங்கள் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் அமைந்துள்ள காரணத்தால் இந்த பகுதிகள் பல்வேறு வழிகளில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. குமரி மற்றும் நெல்லை மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும், தேர்தெடுக்கப்பட்ட மக்கள்பிரநிதிநிகளும் இப்பிராச்தியத்தைப் பிரித்து மதுரை கோட்டத்துடன் இணைப்பதற்கு எந்தவித நடவடிக்கையும்; கடந்த 40 ஆண்டுகளாக  எடுக்கவில்லை. இந்த பிரச்சனைகள் பற்றி அவ்வப்போது பேசப்பட்டு குறிப்பாக தேர்தல் நேரத்தில் வருவதோடு  நின்று விடுகிறது.
குமரி மாவட்டத்திலுள்ள ரயில் நிலையங்களில் போதிய வசதிகள் செய்து தரப்பட வில்லை. ஆனால் இங்குள்ள நிலையங்கள் ஈட்டித்தரும் வருமானம் வானளாவி நிற்கிறது. இத்தனை ஆண்டுகள் ஆகியும் கேரளாவின் ஆதிக்கத்தில் இருப்பதால் குமரிமாவட்ட மக்கள் ரயில்வேத்துறை வளர்ச்சியில் வஞ்சிக்கப்படுகிறார்கள். இரண்டாவதாக இங்கிருந்து புறப்படும் ரயில்கள் அனைத்தும் குமரி மக்களின் பயன்பாட்டை நிராகரித்துää கேரளாவில் உள்ள பயணிகளின் வசதியை மையமாக வைத்து பட்டியலிடப்பட்டுள்ளது. ரயில்கள் புறப்படும் மற்றும் வந்து சேரும் நேரங்கள் மற்றும் செல்லும் திசைகள் குமரிமக்களுக்குப் பாதகமாகவும் கேரளா மக்களுக்கு சாதகமாகவும் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் குமரி மாவட்டத்துக்குள் வந்து ரயில் நிலையங்களில் ரயில்கள் தங்கி கேரளத்தவரின் வசதிக்காக ஓடுகின்றன.  ஏ.கா நாகர்கோவில் - திருநெல்வேலி மார்க்கத்தில் ஒரே ஒரு ஜோடி பயணிகள் ரயில்கள் மட்டும்தான் இயக்கப்படுகின்றன. ஆனால் நாகர்கோவில் - திருவனந்தபுரம் மார்க்கம் தினசரி ஆறு பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன்.
திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள 625 கி.மீ தூரம் உள்ள இருப்புபாதை வழித்தடத்தில்  கன்னியாகுமரி – நாகர்கோவில் - திருவனந்தபுரம் 87 கி.மீ தூரமும், நாகர்கோவில் - திருநெல்வேலி 74 கி.மீ தூரம் ஆக மொத்தம் 161 கி.மீ தூரம் உள்ள ரயில்வே இருப்புபாதை சுமார் 25 சதமானம் நாகர்கோவில் துணை கோட்டத்தின் கீழ் வருகின்றது. இதில் தமிழகத்தில் சுமார் 130 கிமீ இருப்புபாதையம்,கேரளாவில் 31கி.மீ தூரத்துக்கு இருப்புபாதையும் உள்ளது.  அப்போது கொடுக்கப்பட்ட உறுதிமொழியின் படி குமரி மாவட்ட ரயில்வே வழித்தடங்களை அதாவது நாகர்கோவில் துணை கோட்டத்தின் கீழ் உள்ள கன்னியாகுமரி – நாகர்கோவில் - நேமம் மற்றும் நாகர்கோவில் - திருநெல்வேலி வரை உள்ள பாதையை மீண்டும் மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும். இதைப்போல் மதுரை கோட்டத்தின் கீழ் உள்ள பகவதிபுரம் (செங்கோட்டை) – புனலூர் - கொல்லம் ரயில்பாதையை திருவனந்தபுரம் கோட்டத்துடன் இணைத்து கொள்ளலாம். இவ்வாறு இரண்டு வழித்தடங்களையும் நிர்வாக வசதிக்காக கோட்டத்தை மாற்றம் செய்யும் போது எந்த ஒரு கோட்டத்துக்கும் இழப்பு இருக்காது. ரயில்வே வாரியம் இந்த பகுதிகளில் உள்ள இருப்புபாதை வழித்தடங்களை நிர்வாக வசதிக்காக மாற்றியமைக்க தெற்கு ரயில்வேக்கு பலமுறைகளில் கடிதம் அனுப்பியுள்ளது. இதன்படி 02-11-2015, 1-12-2015, 07-01-2016,23-08-2016,  20-02-2017 ஆகிய தேதிகளில் ஐந்து முறை கடிதம் அனுப்பியுள்ளது.
குமரி மாவட்ட ரயில்வே வழித்தடங்களை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டி இது வரை பதவி வகித்து வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தேர்தலின் போது தேர்தல் அறிக்கையாக கொடுத்து வந்துள்ளனர். ஆனால் அதன் பிறகு இந்த பிரச்சனை சில சமயங்களில் செய்திகள் அடிபடுவதோடு நின்று விடுகிறது. 1979-ம் ஆண்டு திருவனந்தபுரம் கோட்டம் உருவாக்கும் போது குமரிஅனந்தன் நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தார். அதன்பிறகு டென்னீஸ் 1980 முதல் 1999  வரை நாகர்கோவில் பாராளுமன்ற உறுப்பினாராக இருந்தார். பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய மந்திரியாக 1999 முதல் 2004 வரை காலம் இருந்தார். பின்னர் 2004 முதல் 2009 வரை கம்யூனிஸ்டு கட்சியை சார்ந்த பெல்லார்மின் இருந்தார். 2009முதல் 2014 வரை ஹெலன்டேவிட்சன் இருந்தார். 2014 முதல் 2019 வரை மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் தனி ஒருவனாக மத்திய மந்திரியாக கொலாச்சினார். அடுத்து காங்கிரஸ் கட்சியை சார்ந்த வசந்தகுமார் சுமார் ஒரு வருடம் எம்.பியாக இருந்து கோரோனாவில் இறந்து விட்டார். ஆனால் இதுவரை குமரி மாவட்டத்தின் நீண்ட பிரச்சனையான கோட்டத்தை மாற்ற யாராலும் முடியவில்லை.
குமரி மாவட்டத்தை ரயில்வே இருப்புபாதைகளை மதுரை கோட்டத்துடன் இணைக்க பல ஆண்டுகளாகவே கேரளா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 2014 முதல் 2019-ம் ஆண்டு வரை கேரளாவிலிருந்து ஆளும்கட்சிக்கு எந்த ஒரு எம்.பியும் இல்லை. இதனால் அரசியல் ஈதியாக அழுத்தம் கொடுக்க முடியாத நிலை உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் மத்திய அமைச்சராக இருப்பதால் குமரி மாவட்ட ரயில்வே வழித்தடங்களை மதுரை கோட்டத்துடன் எளிதாக இணைத்திருக்கலாம்.  இது மட்டுமில்லாமல் இந்த காலகட்டத்தில்தான் கொல்லம் - புனலூர் - செங்கோட்டை பாதை அகல பாதை பணிகள் நிறைவுபெற்று பயணிகள் ரயில்கள் இயக்கத்துக்கு திறந்து விடப்பட்டுவிட்டது. இந்த பாதை மதுரை கோட்டத்தின் கீழ் உள்ளது. இந்த பாதையை திருவனந்தபுரம் கோட்டத்ததுடன் இணைத்துவிட்டு குமரி மாவட்ட பகுதிகளை மதுரை கோட்டத்துடன் இணைக்க ரயில்வேத்துறை திட்டத்தை தீட்டியது. கடந்த 40 ஆண்டுகளில் ஒரு முறையும் இல்லாமல் ரயில்வே வாரியம் இந்த பகுதிகளை இணைக்க திட்டமும் தீட்டியது. இந்த திட்டத்தை அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுத்திருந்தால் எளிதாக ரயில்வே கோட்டம் மாற்றம் பெற்றிருக்கும். இவ்வாறு இவ்வாறு இரண்டு கோட்ட பகுதிகளை மாற்றம் செய்யும் போது கேரளாவின் எதிர்ப்பை எளிதாக ஈடுகட்ட முடியும். இந்த திட்டத்தை குமரியிலிருந்து மத்திய அமைச்சர் இருந்தும் செயல்படுத்த முடியாமல் போய்விட்டது. இனி வரும்காலங்களில் இது போன்று ஓர் அரசியல் சூழ்நிலை அமையும் என்றால் கண்டிப்பாக அமையாது. இந்த அரசியல் சூழ்நிலையில் கோட்டத்தை மாற்ற முடியவில்லை என்றால் இனி எந்த ஒரு காலத்திலும் கோட்டத்தை மாற்றம் செய்ய முடியவே முடியாது. கேரளா லாபியின் முன்பு நாம் மக்கள் பிரதிநிதிகளால் ஈடுகொடுக்க முடியாது. இந்த பிரச்சனை பற்றி  நமக்கு ஆதரவுக்காக பெரிதாக தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் கண்டு கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் நெல்லை எனது எல்லை குமரி எனது தொல்லை என்ற வாக்குக்கு ஏற்ப திராவிட கட்சிகள் செயல்படுவதால் கண்டிப்பாக குமரியை பற்றிய எந்த ஒரு அக்கரையும் தமிழக அரசியல்வாதிகளுக்கு கிடையாது. ஆகவே இந்த பிரச்சனை இன்னமும் பல நூறு ஆண்டுகளுக்கு தேர்தல் அறிக்கையாகவே அனைத்து தேர்தலிலும் இருக்கும்.
மோடியின் பிரச்சாரத்தின் போது இருவழிபாதை திட்டம்:
    கடந்த முறை 2014-ம் ஆண்டு பாரத பிரதமர் மோடி அவர்கள் கன்னியாகுமரியில் நிடைபெற்ற பிரசாரத்தின் போது கடந்த 10 ஆண்டுகால காங்கிரஸ் அரசு கன்னியாகுமரி – மதுரை இருவழிபாதை திட்டத்தை செயல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார். இது மட்டும் இல்லாமல் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்த இருவழிபாதை திட்டத்தை உடனடியாக செயல்படுத்தும் என்றும் குறிப்பிட்டார். இந்த திட்டத்தின் முக்கியதுவத்தை குறித்து பிராதமர் நன்றாக அறிந்தவராக உள்ளார். இதன்படி இந்த திட்டம் 2015-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றது குறிப்பிடதக்கது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo