ப்ரீ பையர் -ஆன் லைன் கேம் விளையாடும் சிறுவர்கள் மனப் பாதிப்புக்கு உள்ளாக்கும் வீடியோ கேம் -களை தடை செய்ய தமிழக அரசு தடை விதிக்குமா?
தூத்துக்குடி 2020 டிசம்பர் 2 ; கொரோனா பரவல் எதிரொலியால் 2020 மார்ச் 24ம் தேதி முதல் இந்தியா முழுவதும்,அணைத்து பணிகளும் தடுத்து நிற்கும் நிலைமை உருவானது.இந்த நிலையில் கடந்த 9 மாதமாக சிறுவர்கள் பள்ளி மாணவர்கள் 99 சதவிகிதம் பேர் மொபைல் போனில் விளையாண்டு கொண்டிருக்கிறார்கள் . கிராமம், நகரம் வித்தியாசமின்றி, எல்லா இடங்களிலும் இதுதான் நிலை. மொபைல் மொத்தப் பொழுதுகளையும் தின்று தீர்த்துக்கொண்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 14 மற்றும் 15 -ஆம் தேதிகளில் தமது வங்கிக் கணக்கிலிருந்து 18,000 ரூபாய் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.உடனே அவர் அளித்த புகாரின் பெயரில் சைபர் கிரைம் போலீஸார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அதில், அவரது வங்கிக் கணக்கிலிருந்து, ஆன் -லைன் முறையில் பணபரிமாற்றம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதும் (இ-வாலட்), மொபைல்ஃபோன் எண்ணை பயன்படுத்தி, வங்கிக் கணக்கிலிருந்து பலமுறை பணம் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
சம்பந்தப்பட்ட நபர், தனது மொபைல்எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை, முகம் தெரியாத மூன்றாவது நபருக்கு மின்னஞ்சலிலோ, தொலைபேசியிலோ, அவர்கள் சொல்லும் ஆசைவார்த்தைகளை நம்பி பகிர்ந்து கொண்டிருந்தால் மட்டுமே இதுபோன்ற நூதன திருட்டு நடைபெறும் என போலீஸார் தெரிவித்தனர்.
''ஹலோ நான் லண்டன்ல இருக்கேன்..! சென்னையில் இருந்தே பெற்றோரை ஏமாத்திய மகன்..
ஆனால், தமது மொபைல் எண்ணுக்கு ஓடிபி எதுவும் வரவில்லை என்றும், அப்படியே வந்திருந்தாலும் அதனை தான் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை எனவும் புகார்தாரர் திட்டவட்டமாக கூறினார். இதையடுத்து, புகார்தாரரின் மனைவி மற்றும் மகனிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது தான் விஷயம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது.
புகார்தாரரான குருக்கள், கோயில் பணி முடித்து வீடு திரும்பியதும் அவரது மொபைல்ஃபோனை எடுத்து துழாவுவதை, அவரது எட்டு வயது சிறுவன், வழக்கமாக கொண்டிருந்துள்ளான். இப்படிதான் கடந்த டிசம்பர் மாதம் ஒரு பொன்மாலை பொழுதில், தன் அப்பாவின் செல்போனை எடுத்து அச்சிறுவன் விளையாடி கொண்டிருந்துள்ளான்.
அப்போது ஆன்- லைன் கேம் விளையாட அவனுக்கு அழைப்பது வந்துள்ளது. முதல்கட்டமாக 80 ரூபாய் செலுத்தி, ப்ரீ பையர் எனும் அந்த கேமை பதிவிறக்கம் செய்து சிறுவன் விளையாடி உள்ளான். நாளடைவில் அதற்கு அடிமையான அச்சிறுவன், தன் தந்தை வீட்டில் இருக்கும் பொழுதெல்லாம் அவரது மொபைல்ஃபோன் மூலம், ஆன் -லைன் கேம் விளையாடி வந்துள்ளான்.
ஒவ்வொரு முறையும் தமது தந்தையின் வங்கிக் கணக்கிலிருந்து 500 ரூபாய் செலுத்தி வந்துள்ளான். இதன் உச்சமாக, ஆன் - லைன் கேமில் அடுத்தகட்டத்துக்கு செல்ல வேண்டி, கடந்த ஆகஸ்ட் 14 மற்றும் 15 - ஆம் தேதிகளில், 18,000 ரூபாய் செலுத்தியுள்ளான். பல்லாயிரக்கணக்கில் பரிசுத்தொகையை வெல்லலாம் என அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதியை நம்பி அச்சிறுவன், இவ்வளவு பெரிய தொகையை தமது தந்தையின் வங்கிக் கணக்கிலிருந்து ஆன்-லைன் முறையில் செலுத்தியுள்ளான் என்பது விசாரணையில் தெரிய வந்தது,
தொழில் நுட்ப வளர்ச்சி என்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், அதுவே அடிமைப்படுத்துவதும் நிலைக்குச் செல்வது ஆபத்து" என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவர்கள் சிலர் அதனைப் பயன்படுத்தி ஓவியம் வரைதல், கைவினைப் பொருட்கள் தயாரித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு பொழுதைக் கழித்து வருகின்றனர். ஆனால், சில மாணவர்கள் தொடர்ந்து செல்போன் விளையாட்டிலேயே மூழ்கியுள்ளனர்.குழுவாக அமர்ந்தபடி சிறுவர்கள் செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடுவதைக் கண்ட போலீஸார் அவர்களுடைய செல்போன்களைப் பறிமுதல் செய்தனர். செல்போன் விளையாட்டை விளையாடுவதால் மாணவர்கள் பலர் மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை வரை செல்கின்றனர். தேவையற்ற செல்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுகிறது.
2016-ல் உலக மக்கள் தொகையில் 251 கோடி பேர் வீடியோ கேம் (Online and Offline) விளையாடியிருக்கிறார்கள். 2018-ல் உலக அளவில் வீடியோ கேம் நிறுவனங்களின் சந்தை மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 8.2 லட்சம் கோடி என்கிறது. புள்ளிவிவரங்களைச் சேகரித்து வெளியிடும் `ஸ்டேடிஸ்டா’ என்ற இணையதளம். இதன்மூலம் மொபைல் நம் வாழ்க்கையில் எவ்வளவு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். 1971-ம் ஆண்டு, முதல்முதலாக வர்த்தக நோக்கில் வீடியோ கேம் இயந்திரங்கள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன. அதன் பிறகு வரிசையாகப் பல படிநிலைகளைக் கடந்து இன்று விஸ்வரூப வளர்ச்சியடைந்திருக்கிறது வீடியோ, டிஜிட்டல் கேம் உலகம்.
வீடியோ கேம், டிஜிட்டல் வீடியோ கேம் விளையாட்டுகளுக்கு அடிமையாவது ஒரு வகை `மனநல பாதிப்பு’ (Mental Disorder) என்று ஐ.சி.டி-ன்( International Classification of Diseases) 11-வது பதிப்பில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. உலகச் சுகாதார நிறுவனத்தின் கீழ் செயல்படும் நோய்களை வகைப்படுத்தும் சர்வதேச அமைப்பான ஐ.சி.டி-யின் 11 வது பதிப்பு ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. `அடிமையாகும் குணாதிசயத்தால் ஏற்படும் மனநல பாதிப்பு` என்ற பிரிவின் கீழ் `கேமிங் டிஸ்ஆர்டர்’ வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.
கேம் விளையாடுபவர்கள் அனைவருக்கும் இந்த பாதிப்பு ஏற்படுவதில்லை. அதிகநேரம் விளையாடுபவர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, சமூகச் செயல்பாடுகளிலோ, குடும்ப வாழ்க்கையிலோ ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே கவனிக்கவேண்டும். இதுபோன்ற பாதிப்புகள் அவர்களுக்கு `கேமிங் டிஸ்ஆர்டர்` மனநோய் இருப்பதற்கான அறிகுறிகள்.
அன்றாடம் செய்ய வேண்டிய அடிப்படையான வேலைகளைக்கூட செய்யாமல் எப்போதும் கேம் விளையாடிக்கொண்டே இருப்பது, வேறு எதிலும் கவனமின்றி தீவிரமாக விளையாடுவது, இடைவெளியே இல்லாமல் அதிகநேரம் விளையாடுவது, போன்றவை `கேமிங் டிஸ்ஆர்டர்`-க்கான அறிகுறிகள். தொடர்ந்து கேம் விளையாடிக்கொண்டே இருந்தால் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, கல்வி, வேலை, பிற அன்றாடச் செயல்பாடுகள் பாதிக்கப்படும். ஒரு கட்டத்தில் பெரும் மன அழுத்தம் ஏற்படும்.
வீடியோ கேம் விளையாடுவது ஒரு பொழுதுபோக்காக இருக்கும் வரை எந்தப் பிரச்னையும் இல்லை’
வீடியோ கேம் நிறுவனங்களின் இன்றைய அசுர வளர்ச்சி நம்மை பிரமிக்க வைக்கிறது. இந்த வளர்ச்சி தான் இன்று ஆபத்தாக நம்முன் நிற்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை வீடியோ கேம் என்பது ஒரு பொழுது போக்காகத்தான் இருந்தது. டிவி பார்ப்பது, கிரிக்கெட் விளையாடுவது போன்று ஒரு பொழுதுபோக்கு. 80-களில் பிறந்தவர்கள் தெருக்களில், மைதானங்களில் விதவிதமான விளையாட்டுகளை விளையாடினார்கள். இப்போது இருக்கும் சிறுவர்கள் பெரும்பாலும் வீட்டிலேயே தான் இருக்கிறார்கள். கட்டாயத்தின் பேரில் தான் வெளியே செல்கிறார்கள்.
வீடியோ கேம் விளையாடுவது தவறில்லை. `அது உங்கள் தினசரி வாழ்க்கையை பாதித்தாலோ, அதனால் ஏதாவது கெட்டது நடந்தாலோ, அதை மனநல பாதிப்பு' என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். கேம் விளையாடுவதே மனநல பாதிப்பு என்று சொல்லமுடியாது. கேம் விளையாடுவதால் உறவோ, படிப்போ, வேலையோ பாதிக்கப்பட்டால் மட்டுமே அது மனநல பாதிப்பு..." என்கிறார் அவர்.
இப்போது ஆன்லைன் கேமில் பணம் சம்பாதிக்கவும், வெவ்வேறு இடங்களில் இருக்கும் நண்பர்களுடனும் சேர்ந்து விளையாடவும் முடியும். இது விளையாடுபவர்களுக்குக் கூடுதல் உற்சாகத்தைக் கொடுக்கிறது. விளையாட்டில் ஒவ்வொரு முறை வெற்றிபெறும் போதும், மற்றவர்களால் புகழப்படுவார்கள். அந்த உடனடி பாராட்டுதல் அவர்களை மேலும் மேலும் விளையாடத் தூண்டுகிறது. இங்கே புகழ்ச்சி, பாராட்டுக்கு மயங்காதவர்களே இல்லை. எந்தவொரு செயலுக்கு உடனடியாகப் பாராட்டு கிடைக்கிறதோ, அதை நாடிச் செல்வது இயல்பான ஒன்றுதான். அப்படிப்பட்ட உத்தியைத்தான் கேம் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. அதேபோல, விளையாட்டில் ஒரு சுவாரஸ்யமும், பணம் ஈட்டும் வழியும் இருந்தால் சொல்லவே வேண்டாம்.
வீடியோ கேமால் பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் சிறுவர்களே. திரைப்படங்களுக்கு வயது தரச்சான்று இருப்பது போலவே, கேம்களுக்கும் இருக்கிறது. குறிப்பாக சிறுவர்கள் விளையாடும் கேம்களுக்கு இதை முறையாகக் கடைபிடிக்கவேண்டும். 18 வயதுக்கு மேலுள்ளவர்கள் விளையாடும் விளையாட்டை, அதற்குக் கீழ் இருப்பவர்கள் விளையாடக் கூடாது. 5 வயதுக்கு மேல், 10 வயதுக்கு மேல், 12 வயதுக்கு மேல், 15 வயதுக்கு மேல் எனப் பல பிரிவுகளாக கேம்கள் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. கேம் சிடிக்கள், ஆன்லைன் கேமை `லாகின்' செய்யும்போதும், ஸ்மார்ட்ஃபோனில் கேம் டவுன்லோடு செய்யும் போதும், எத்தனை வயதுக்கு மேல் இருப்பவர்கள் அந்த கேமை விளையாடலாம் என்று தெளிவாகக் குறிப்பிடுவார்கள். ஆனால், அதையெல்லாம் பெற்றோர்கள் சரியாகக் கவனிப்பதில்லை. சிறுவர்களால் அதைப் புரிந்துகொள்ள முடியாது. சிறுவர்கள் அடம்பிடித்தே வீடியோ கேம் போன்ற கருவிகளை வாங்கிவிடுவார்கள். `வாங்கிக் கொடுத்துவிட்டோம், ஏதோ விளையாடுகிறான்’ என்று பெற்றோர்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும்.
சிறுவர்கள் விளையாடக்கூடாத வன்முறை, பாலியல் தொடர்பான கேம்கள் அவர்களின் மனதில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதை பெற்றோர்களே முறைப்படுத்த வேண்டும். சிறுவர்களுக்கு அதன் பின்விளைவுகள் தெரியாது. `குழந்தைகள் என்ன விளையாடுகிறார்கள்', `என்ன டவுன்லோடு செய்கிறார்கள்' என்றெல்லாம் கண்காணிக்க முடியவில்லையென்றால், கேம், ப்ளே ஸ்டேஷன், மொபைல்ஃபோன்கள் போன்றவற்றை அவர்களுக்கு வாங்கித்தரக் கூடாது.
வயது வந்தவர்களும் இப்போது அதிகமாக கேம் விளையாடுகிறார்கள். செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யாமல் விளையாடுவதே பிரச்னைகளுக்குக் காரணம். நீண்டநேரம் கேம் விளையாடுவதால், தலைவலியும் கண்களுக்குப் பாதிப்பும் ஏற்படும். உடற்பயிற்சி செய்யாமல், சரியாகச் சாப்பிடாமல், போதிய அளவுக்குத் தண்ணீர் குடிக்காமல் விளையாடிக்கொண்டே இருந்தால் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதை உடனடியாகக் கவனித்தாக வேண்டும்.
`எங்கள் வீட்டுக் குழந்தைகள் வீடியோ கேம் விளையாடுகிறார்கள்', `ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள்' என்று யாரும் பயப்படவேண்டிய அவசியமில்லை. வீடியோ கேம் ஒரு நல்ல பொழுதுபோக்குதான், ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு செய்வது நல்லது.
வீடியோகேம் உள்ளிட்ட கருவிகளை ஒரு நாளில் இரண்டு மணி நேரத்துக்கும் குறைவாகப் பயன்படுத்துமாறு பெற்றோர்கள் பார்த்துக்கொள்ளவேண்டும். விடுமுறை நாள்களாக இருந்தாலும் அதுதான் அளவு.
பெற்றோர் கட்டுப்பாட்டு மென்பொருளை' (Parental Control Software) அனைத்துத் தொழில்நுட்பக் கருவிகளிலும் இன்ஸ்டால் செய்வது நல்லது.
ஸ்மார்ட்போன் உள்ளிட்ட திரையுடன் இருக்கும் அனைத்துக் கருவிகளையும் பெற்றோரின் பார்வையில், வீட்டின் பொதுவான இடத்தில் பயன்படுத்த சிறுவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
குழந்தைகள் தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காக ஸ்மார்ட்போன்களை அவர்களிடம் கொடுக்கவேண்டாம்.
சீனாவில் ஆன்லைன் மூலம் கேம் விளையாடுவது எண்ணிக்கை 23 சதவீதம் பேர் என்றும் அதில் 18 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன குறிப்பாக சிறுவர்கள் ஆன்லைன் கேம் களுக்கு அடிமையாகி வருவதை தொடர்ந்து ஆன்லைன் கேம்கள் இரவு நேரங்களில் விளையாட தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஆன்லைன் கேம் இருக்கு அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது சீன மக்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.கட்டுப்பாடற்ற, பல பேர் சேர்ந்து விளையாடும் ஆன்லைன் கேம்களைத் தவிர்க்க வேண்டும். அவை ஆஃப்லைன் கேம்களைவிட மோசமாக அடிமையாக்குபவை.குழந்தைகள் விளையாடும் விளையாட்டுகளை பெற்றோர்களும் விளையாடக் கற்றுக்கொள்வது நல்லது. அவர்களுடன் நேரம் செலவிடுங்கள். அறிவுத்திறனை வளர்க்கும் பொழுதுபோக்குகளான செஸ், புதிர் விளையாட்டுகள் போன்ற மற்ற விளையாட்டுகளை விளையாடச் செய்து, அவர்களைப் பாராட்டுங்கள்.