Onetamil News Logo

டி.எஸ்.பி பிரகாஷ் அதிரடி விசாரணையில் தூத்துக்குடியில் 100 பவுன் தங்க நகை கொள்ளை போனதாக  நாடகமாடிய பெண் கைது 

Onetamil News
 

டி.எஸ்.பி பிரகாஷ் அதிரடி விசாரணையில் தூத்துக்குடியில் 100 பவுன் தங்க நகை கொள்ளை போனதாக  நாடகமாடிய பெண் கைது 


தூத்துக்குடி 2020 ஏப்ரல் 3 ;டி.எஸ்.பி பிரகாஷ் அதிரடி விசாரணையில் தூத்துக்குடியில் 100 பவுன் தங்க நகை கொள்ளை போனதாக  நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய செல்வம்  நகரைச் சார்ந்த வின்சென்ட் என்பவர்  02.04 .2020 அன்று இரவு தனது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் தானும் தன் மனைவி ஜான்சி ராணியும் படுத்திருந்த அறையை வெளிப்புறமாக தாழிட்டு பக்கத்தில் இருந்த அறையில் உள்ள பீரோவில் இருந்த 100 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றதாக 03.04.2020 அன்று காலை தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று கொடுத்தார். புகார் மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அவர்களின் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்ட நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  பிரகாஷ் மேற்பார்வையில் ஆய்வாளர்  பிரேமா தலைமையில் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், மோப்பநாய் கிஜோ வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடிச் சென்று திரும்பியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். காவல்துறையின் கிடுக்கிப்பிடி விசாரணையில் புகார்தாரர் வின்சென்ட் சவேரியார் பிச்சை அவர்களின் மனைவி ஜான்சி ராணி (57) என்பவர் கணவரின் கஞ்சத்தனத்தின் காரணமாக  நகையை திருடிய தோடு குடும்பத்தாரை ஏமாற்றும் விதமாக கொள்ளை சம்பவ நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் என்பது தெரியவந்தது.
காவல்துறையினர் ஜான்சிராணியிடம் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டதில் தனது வீட்டருகே உள்ள வெற்றிடத்தில் 100 பவுன் தங்க நகையை  புதைத்து வைத்து இருப்பதை ஒப்புக் கொண்டு நகை புதைத்த இடத்தை காவல்துறையிடம் சுட்டி காட்டி   100 பவுன் தங்க நகையை ஒப்படைத்தார். எனவே காவல்துறையினர் ஜான்சிராணியை   கைது செய்தனர். சம்பவம் நடைபெற்ற 12 மணி நேரத்திற்குள் துரிதமாக செயல்பட்டு 100 பவுன் தங்க நகைகளை மீட்ட காவல்துறையினரை காவல்துறை உயரதிகாரிகளும், அப்பகுதி பொதுமக்களும் வெகுவாக பாராட்டினார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo