Onetamil News Logo

உலக மாற்றுத்திறனாளிகள் தினம் /சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் நிலை !! அரசிடம் முன்வைக்கும் கோரிக்கைகள் !! 5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் 

Onetamil News
 

உலக மாற்றுத்திறனாளிகள் தினம் /சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் நிலை !!
அரசிடம் முன்வைக்கும் கோரிக்கைகள் !! 5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் 



வள்ளியூர்  2020 டிசம்பர் 3;பிறரிடம் கையேந்தாமல் உழைப்பால் உயர்ந்து காட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மாற்றுத்திறனாளி சமூகத்தினர்.சாதித்தவர்கள் சில பேர்,ஆனால் சாதிக்க துடிப்பவர்கள் பல லட்சம் பேர்.அவ்வாறு சாதித்தவர்களுக்கு உதவியாக இருந்தது சில தனி நபர்கள் மற்றும் அமைப்புகள் தான்.அந்த வரிசையில் நாங்களும் சாதித்து காட்ட விரும்புகிறோம் என்ற எண்ணத்தில் வாழும் மாற்றுத்திறனாளிகள் பல லட்சம் பேர் உள்ளனர்.அவர்களுக்கு உதவ போவது அரசா ? அல்லது மனிதநேயம் கொண்ட நல்ல உள்ளங்களா ?
அரசு வேலைவாய்ப்புகளில் ;
மாற்றுத்திறனாளிகள் பலர் பட்டங்கள் பல பெற்றும் உரிய அரசு வேலை கிடைக்காமல் அல்லல் படுகின்றனர். அரசாங்கம் மாற்றுத்திறனாளிகளுக்கான 5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாத காரணத்தினால் படித்து பட்டம் பெற்ற பல மாற்றுத்திறனாளிகள் மிக குறைந்த ஊதியத்தில் தனியார்துறைகளில் வேலை செய்து வருகின்றனர்.மேலும் பல மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலகங்களில் ஒப்பந்த அடிப்படையில் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர். அரசு எப்போது ஐந்து சதவீத இட ஒதுக்கீட்டை  அமல்படுத்தபோகிறதோ என்ற கனவுகளோடு வாழ்ந்து வரும் மாற்றுத்திறனாளிகள் ஏராளம்.
சுயதொழில் ஊக்குவிப்பு  ;
ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் மிக சிறு,குறு தொழில்கள் செய்தும் அதில் போதிய வருமானம் கிடைக்காமலும் கிடைக்கின்ற சொர்ப்ப வருமானத்துடன் கஷ்டத்தோடு வாழ்ந்து வரும் மாற்றுத்திறனாளிகள் பல ஆயிரம் உண்டு. அரசாங்கம் தம்மை அலைக்கழிக்காமல் வங்கி கடன்கள் வழங்கி சுயதொழிலை ஊக்கப்படுத்தமாட்டார்களா  என்ற ஏக்கத்தில் வாழும் மாற்றுத்திறனாளிகள் ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் சுயமாக தொழில்கள் செய்து ஓரளவு லாபம் ஈட்டி வாழ்ந்து வருகின்ற மாற்றுத்திறனாளிடம் இருந்து அவர்களின் தொழிலை மிரட்டியும், ஏமாற்றியும் அபகரிக்க துடிக்கும் உறவுகள் கூட்டம் ? மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் பாதுகாப்பு அளிக்க தவறிவிட்டது அரசு ?
நீதித்துறையில் முன்னுரிமை கேட்டு ;
மாற்றுத்திறனாளி சமூகத்தை பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசால் இயற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016 இன்று வரை முழுமையாக நடைமுறை படுத்தப்படவில்லை.
அச்சட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை அவர்களின் ஊனத்தை குறை சொல்லி திட்டுபவர்களுக்கு தண்டனை என்று குறிப்பிட்டுள்ளது.மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பதும் வழக்குகளை விரைந்து நடத்தி முடித்திடவும் என்பது உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இடம் பெற்று இருந்தாலும் நாளது தேதிவரை அச்சட்டங்கள் அமலுக்கு வரவில்லை.இதனால் பல அப்பாவி மாற்றுத்திறனாளி குடும்பங்கள் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளின் பிடியில் சிக்கி வாழ்வாதரங்களை இழந்து நடு வீதியில் நிற்கின்றனர்.சில மாற்றுத்திறனாளிகள் தங்களின் தொழில்களுக்கு பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்றத்தின் உதவியை நாடியும் இன்றுவரை அதற்காக உயர்நீதிமன்றம் யாதொரு இறுதி உத்தரவுகளும் வழங்காமல் உள்ளது.இதனால் சில மாற்றுத்திறனாளி குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில் உள்ளது.
காவல்துறையில் முன்னுரிமை வேண்டி ;
மாற்றுத்திறனாளி ஒருவர் சாதாரண நபர்கள் மூலம் தாக்கப்படும் பொழுது அது குறித்து அவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே புகார் அளிக்கவும்.காவல்துறை உயர் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்கும் புதிய திட்டங்களை கொண்டு வரவேண்டும்.
உறவுகளால் ஏமாற்றம் ;
மனவளர்ச்சி குன்றியோர், தவளும் ஊனமுற்றோர், பார்வை குறைபாடு உடையோர் இது போன்று ஊனத்தை கொண்ட நபர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அவர்களின் பெற்றோர்கள் ஏற்படுத்தி கொடுக்கின்ற தொழில்கள்,வீடுகள் சொத்துக்களை சம்மந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து அவர்களின் உறவுக்காரர்கள் சுலபமாக அபகரித்து விடுகின்ற சூழல் நிலவுகிறது. மாற்றுத்திறனாளி நபர்களின் வாழ்க்கை நலனுக்காக கொடுக்கப்பட்ட சொத்துக்கள், தொழில்கள் அபகரிக்கப்பட்ட பல மாற்றுத்திறனாளி தோழர்கள் காவல்துறையிலும்,நீதித்துறையிடமும் உதவிகள் கேட்டு கிடைக்கப்பெறாமல்  வாழ்க்கையை தொலைத்து கோயில்களில் பிச்சை எடுத்தும், ஆதரவற்றோர் இல்லங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வாழ்க்கையை யார் மீட்டு கொடுப்பார்கள் ?
கானல்நீராகி போன திருமணம் ;
கடும் ஊனத்தை கொண்ட மாற்றுத்திறனாளி சகோதர,சகோதரிகளுக்கு திருமணம் என்ற பந்தம் கிடைக்காமல் வாழ்ந்து வருகின்றனர்.நல்ல நிலையில் உள்ள மனிதப்பிறவிகள் மாற்றுத்திறனாளிகளை ஒதுக்கியே வாழகின்றனர்.எங்களாலும் இல்லற வாழ்வில் ஈடுபட முடியும் என்பதை சக மனிதர்கள் உணர வேண்டும்.
அரசிடம் எதிர்பார்ப்பது ;
மாற்றுத்திறனாளிகள் பிறரை சார்ந்து வாழாமல் இருக்க தாங்களே தங்களின் வாழ்க்கையை நடத்தி கொள்ள 5% இட ஓதுக்கீடுபடி வேலை வாய்ப்புகள் வழங்க முன்வரவேண்டும்.சுயமாக தொழில் செய்கின்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் பாதுகாப்பு  வழங்கியும் சுய தொழிலை ஊக்குவிக்கும் பொருட்டு மாற்றுத்திறனாளிகளை அலைகழிக்காமல் மானியத்துடன் கூடிய கடன் கிடைத்திடவும்,மாற்றுத்திறனாளிகள் அனுப்பும் வழக்குகள் தொடர்பான புகார் மனுவினை நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து நீதி வழங்கிடவும்,சொத்து அபகரிப்பு, தொழில் அபகரிப்பு போன்ற தீய செயல்களில் இருந்து மாற்றுத்திறனாளிகளை பாதுகாத்திடவும்,நமது நாடு சுதந்திரம் அடைந்து இருந்த போதிலும் நம் நாட்டில் வாழ்கின்ற மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையானது போராட்ட களமாகவே சென்று கொண்டிருக்கிறது அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உரிய திட்டங்களை அமல்படுத்தி மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் ஒளி ஏற்ற வேண்டும் என்று அரசு சட்டக்கல்லூரி மாணவர் தங்கமணி  தனது கருத்துக்களை வேதணையோடு தெரிவித்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo