Onetamil News Logo

 எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு தூத்துக்குடி மாவட்டத்துக்கான தமிழ் செம்மல் விருது

Onetamil News
 

 எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு தூத்துக்குடி மாவட்டத்துக்கான தமிழ் செம்மல் விருது


தூத்துக்குடி  2021 ஜனவரி 14 ;திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும்  விழாவிற்கான விருதாளர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
          எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு தூத்துக்குடி மாவட்டத்துக்கான தமிழ் செம்மல் விருது.
திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கப்படும் விருதுகளுக்கான விருதாளர்கள் பெயர்களை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
திருவள்ளுவர் திருநாள் விருதுகளாக: 2021ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது முனைவர் வைகைச்செல்வன் 2020ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது அ. தமிழ்மகன் உசேன், அண்ணல் அம்பேத்கர் விருது வரகூர் அ. அருணாச்சலம், பேரறிஞர் அண்ணா விருது அமரர் கடம்பூர் எம்.ஆர். ஜனார்த்தனன் பெருந்தலைவர் காமராசர் விருது முனைவர் ச. தேவராஜ் மகாகவி பாரதியார் விருது கவிஞர் பூவை செங்குட்டுவன். பாவேந்தர் பாரதிதாசன் விருது அறிவுமதி (எ) மதியழகன், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது வி.என். சாமி, முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது முனைவர் வீ. சேதுராமலிங்கம் வழங்கிட ஆணையிடப் பெற்றுள்ளன.சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளாக: 2020ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்திற்கும், கபிலர் விருது செ. ஏழுமலை, உ.வே.சா விருது கி. இராஜநாராயணன், கம்பர் விருது மருத்துவர் எச்.வி. ஹண்டே, சொல்லின் செல்வர் விருது நாகை முகுந்தன், 
உமறுப்புலவர் விருது ம. அ. சையத் அசன் (எ) பாரிதாசன் ஜி.யு.போப் விருது செருமன் நாட்டைச் சேர்ந்த முனைவர் உல்ரீகே நிகோலசு,இளங்கோவடிகள் விருது திரு.மா. வயித்தியலிங்கன்,
அம்மா இலக்கிய விருது முனைவர் தி. மகாலட்சுமி,சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் விருது ஆ. அழகேசன், 
மறைமலையடிகளார் விருது மறை. தி. தாயுமானவன்,அயோத்திதாசப் பண்டிதர் விருது முனைவர் கோ.ப. செல்லம்மாள், அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது முனைவர் ஊரன் அடிகள், காரைக்கால் அம்மையார் விருது முனைவர் மோ. ஞானப்பூங்கோதை, தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் நாளிதழ் விருது தினமணி நாளிதழுக்கும் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் வார இதழ் விருது கல்கி வார இதழுக்கும் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது செந்தமிழ் திங்களிதழுக்கும், தேவநேயப்பாவாணர் விருது முனைவர் கு. சிவமணி, வீரமாமுனிவர் விருது ஹாங்காங்கைச் சேர்ந்த முனைவர் கிரிகோரிஜேம்சு, சிறந்த மொழிப்பெயர்ப்பாளர் விருது சோ. சேசாச்சலம், முனைவர் இராம. குருநாதன், ப. குணசேகர், முனைவர் பத்மாவதி விவேகானந்தன், சு. ஜோதிர்லதா கிரிஜா, ஜெ. இராம்கி (எ) இராமகிருட்டினன், சுவாமி விமூர்த்தானந்தர், மீரா ரவிசங்கர், திலகவதி, கிருட்டின பிரசாத் ஆகிய பத்து பேருக்கும் மற்றும் 2019ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது சே. இராஜாராமன் மதுரை, உலகத் தமிழ்ச் சங்க விருதுகளாக: 2020ஆம் ஆண்டிற்கான இலக்கிய விருது பிரான்சு நாட்டைச் சேர்ந்த முனைவர் அலெக்சிசு தேவராசு சேன்மார்க், இலக்கண விருது இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் அருணாசலம் சண்முகதாசு மொழியியல் விருது சிங்கப்பூரைச் சேர்ந்த முனைவர் சுப. திண்ணப்பன் வழங்கிட ஆணையிடப் பெற்றுள்ளன.
2020 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருவர் என்ற வகையில் சென்னை மாவட்டத்திற்கு ஜெ.வா. கருப்புசாமி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு வேணு புருஷோத்தமன் அவர்களுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு முனைவர் சு. சதாசிவம், வேலூர் மாவட்டத்திற்கு மருத்துவர் சே. அக்பர் கவுஸர், கிருட்டினகிரி மாவட்டத்திற்கு மா. முருககுமரன், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு முனைவர் இரா. வெங்கடேசன், விழுப்புரம் மாவட்டத்திற்கு பரிக்கல் ந. சந்திரன், கடலூர் மாவட்டத்திற்கு முனைவர் ஜா. இராஜா, பெரம்பலூர் மாவட்டத்திற்கு முனைவர் அ. செந்தில்குமார் (எ) தமிழ்க்குமரன், அரியலூர் மாவட்டத்திற்கு முனைவர் சா. சிற்றரசு, சேலம் மாவட்டத்திற்கு கவிஞர் பொன்.சந்திரன், தருமபுரி மாவட்டத்திற்கு பாவலர் பெரு.முல்லையரசு, நாமக்கல் மாவட்டத்திற்கு ப. முத்துசாமி, ஈரோடு மாவட்டத்திற்கு முனைவர் கா. செங்கோட்டையன் அவர்களுக்கும், கரூர் மாவட்டத்திற்கு சி. கார்த்திகா, கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு எம்.ஜி. அன்வர் பாட்சா, திருப்பூர் மாவட்டத்திற்கு முனைவர் துரை அங்குசாமி, நீலகிரி மாவட்டத்திற்கு ம. பிரபு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு சோமவீரப்பன், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஜீவி (ஜீ. வெங்கட்ராமன்), சிவகங்கை மாவட்டத்திற்கு இரா. சேதுராமன், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பழ. மாறவர்மன், திருவாரூர் மாவட்டத்திற்கு இராம. வேல்முருகன், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மா. கோபால்சாமி, இராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஆ. முனியராஜ், மதுரை மாவட்டத்திற்கு முனைவர் போ. சத்தியமூர்த்தி, திண்டுக்கல் மாவட்டத்திற்கு தா. தியாகராசன், தேனி மாவட்டத்திற்கு த. கருணைச்சாமி, விருதுநகர் மாவட்டத்திற்கு கவிஞர் சுரா (எ) சு. இராமச்சந்திரன், திருநெல்வேலி மாவட்டத்திற்கு வீ. செந்தில் நாயகம், தூத்துக்குடி மாவட்டத்திற்கு ச. காமராசு (முத்தாலங்குறிச்சி காமராசு), கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பா. இலாசர் (முளங்குழி பா. இலாசர்), திருப்பத்தூர் மாவட்டத்திற்கு முனைவர் ச. சரவணன், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நந்திவரம் பா. சம்பத் குமார், இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு கவிஞர் பனப்பாக்கம் கே. சுகுமார், தென்காசி மாவட்டத்திற்கு மு. நாராயணன், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு சி. உதியன், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு துரை குணசேகரன் வழங்க ஆணையிடப் பெற்றுள்ளன.
                       இவ்விருதுகள் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் அவர்களால் வழங்கப்பட உள்ளன. விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகையாக 1 இலட்சம் ரூபாயும் தமிழ்த்தாய் விருது பெறும் தமிழ் அமைப்பிற்கு 5 இலட்சம் ரூபாயும், தமிழ்ச் செம்மல் விருது பெறும் விருதாளர் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 25 ஆயிரமும் வழங்கப்படும். மேலும், இவர்களுக்கு விருதுக்கான தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப் பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo