Onetamil News Logo

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000/- வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்டங்கள் சம்பந்தமாக,தூத்துக்குடி மாவட்ட சட்ட உதவி மையத்தை தொடர்புகொள்ளலாம் ; மாவட்ட சட்ட உதவி மையம்,செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி, R.சாமுவேல் பெஞ்சமின் தகவல் 

Onetamil News
 

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000/- வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்டங்கள் சம்பந்தமாக, தூத்துக்குடி மாவட்ட சட்ட உதவி மையத்தை தொடர்புகொள்ளலாம் ; மாவட்ட சட்ட உதவி மையம், செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி, R.சாமுவேல் பெஞ்சமின் தகவல் 


தூத்துக்குடி 2020 செப் 16 ;மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000/- வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்டங்கள் சம்பந்தமாக,தூத்துக்குடி மாவட்ட சட்ட உதவி மையத்தை தொடர்புகொள்ளலாம் ; மாவட்ட சட்ட உதவி மையம்,செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி, R.சாமுவேல் பெஞ்சமின் தகவல் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட சட்ட உதவி மையம்,செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி, R.சாமுவேல் பெஞ்சமின் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது....மெட்ராஸ் உயர் நீதிமன்றம் நீதி பேராணை மனு எண்கள் 7533, 8277, 7511, மற்றும் 7720/2020 -ல் கடந்த 31.08.2020 அன்று பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள கொரானா (COVID-19) கால நலத்திட்டங்கள் அதாவது மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000/-(ரூபாய் ஆயிரம் மட்டும்) வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்டங்கள் சம்பந்தமாக தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தின் மூலமாக ரூ.1000/- நலத்திட்டம் பெறாமல் விடுபட்டு போன மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை,ஆதார் அட்டை ஆகியவற்றின் ஒளி நகல் உடனும், தங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் வங்கி கணக்கு வைத்திருந்தால் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தை புகைப்படத்துடனும் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட சட்ட உதவி மையத்தினை அணுகினால் மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக மேற்படி நலத்திட்ட உதவி பெற்று தரப்படும் என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.                      
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo